கால நதிக்கரையில் - அத்தியாயம் - 30
(நாவல் - நிறைவுப் பகுதி)
இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும் நடக்கும். ஆனால் மேலமந்தை நிகழ்வுகள் சுத்த சைவமானவை. சிறுத்தொண்டர் அன்னப் படையல், மாரியம்மன் கூழ் ஊற்றுதல், காமதகனம் போல - பலி, சாராயம் இல்லாதவை. எல்லாமே ஊர் மக்களுக்கு எழுச்சியும் ஆர்வமும் ஊட்டுபவை. காமுட்டி என்கிற காமதகனப் பாடல்கள் வெகு சுவாரஸ்யமானவை. சிதம்பரம் படிப்பு முடிந்து தொலை தூரத்தில் வேலைக்குப் போனது வரை ஒரு ஆண்டுகூட இக்கொண்டாட்டங்களைத் தவற விட்டதில்லை. தொடர்ந்து நடக்கிறதா என அறிய மருதுவிடம் கேட்டார்.
"எங்கேங்க? அதெல்லாம் போன தலமொறையோடப் போயிட்டுது. நடத்தி வச்ச பெரிய தலையெல்லாம் ஒருத்தர் கூட இப்ப இல்ல. இப்ப இருக்கிற தலமொறைக்கு அரசியலும், நாட்டாமைக்குப் போட்டியும் தான் இருக்கே தவிர ஊரு வளர்ச்சியிலும், திருவிழா நடத்துறதிலும் எவுனுக்கு அக்கறை? யாராவது ஒருத்தரு தப்பித்தவறி முனைஞ்சாலும் அதத் தடுக்கிறபேருதான் இப்ப அதிகம்" என்று புலம்பாத குறையாய் மருது சொன்னான்.
"அப்பிடியுமா இருக்காங்க? யாரு அப்பிடித் தடுக்கிறது?"
"எல்லாம் பெரிய எடத்துப் பிள்ளைங்கதான். பெருங்காயம் வச்ச டப்பாங்களே அதும் மாதிரி எடுத்து நடத்த முடியலேண்ணாலும் தன்னக் கேக்காம எப்பிடிச் செய்யலாம்னு வறட்டு அதிகாரம் மட்டும்தான் செய்யுதுங்க. நீங்கள்ளாம் வேலைக்குப் போனப்புறம் ரொம்ப நாளைக்கு முன்னே ஒண்ணு நடந்துது. மாரியம்மன் கோயிலுக் குப் பக்கத்துலே இருக்கிற புள்ளையார் கோயிலுக்கு மானியமோ நித்திய பூசைக்கு ஒரு ஏற்பாடோ கெடையாது. வடக்குத்தெரு ராமகோடிதான் யாராவது வேண்டுதலச் செய்யக் கூப்புட்டா வந்து அபிஷேகம் பண்ணி மணியடிச்சு படைச்சுக் குடுப்பான். நம்ம பெரிய புரோகிதரு ஏதோ நெனச்சி, தான் மத்தியானம் சாப்புடுறதுக்கு முன்னால ஒரு உண்டையப் புள்ளையாருக்குக் காட்டிட்டு சாப்புடுவோமேன்னுட்டு உச்சி ளையிலே ஒரு சொம்பு தண்ணிய புள்ளையாரு தலையில ஊத்தி அபிஷேகம் பண்ணி நைவேத்தியம் காட்ட ஆரம்பிச்சாரு. அதுக்காக அவுரு ஆருகிட்டியும் எந்த ஒதவியும் கேக்குல. பாவம் புள்ளையாருக்குத்தான் குடுத்து வக்கில! ரெண்டு நாளுதான்
அவரு முன்னால வெளக்கெரிஞ்சுது. அதுக்குள்ள அதத் தடுத்துட்டாங்க!"
"அப்பிடியா? யாரு அது?"
"எல்லாம் உங்கப் பெரியப்பாரு மகந்தான். அய்யரக் கூப்புட்டு 'ஆரக் கேட்டுக் கிட்டு புள்ளயாருக்கு பூச பண்றீங்கண்ணு?' கேட்டிருக்காரு. அதுக்கு அய்யரு 'நா ஆருகிட்டியும் பொருளோ பணமோக் கேக்குலியே! கேப்பாரில்லாம இருண்டு கெடக்குதேண்ணு நா சாப்புடறதுக்கு முந்தி ஒரு உருண்டய நைவேத்தியம் பண்ணிட்டுச் சாப்புடுறேன். இதுலே ஆருக்கு என்ன இடைஞ்சல்?' னு சொல்லி இருக்காரு. 'இன்னிக்கு இப்பிடித்தான் சொல்லுவிங்க, அப்பறமா நாந்தான் ரொம்ப நாளா பூசை பண்ணிக்கிட்டு வந்தேன்னு உரிமக் கொண்டாடுவீங்க!' ன்னு உங்க அண்ணன் சொன்னாரு. 'இதுல உரிமக் கொண்டாட என்ன இருக்கு? புள்ளயாருக்கு மானியமோ, தெனப்படிக்கு சாசனமோ எதுவும் இல்லியே! ஏதோ புண்ணியத்துக்குச் செய்யறத தடுக்கலாமா?' ன்னு தயவாத்தான் கேட்டிருக்காரு அய்யரு. ஆனா அவுரு மொறட்டுத் தனமா 'அதெல்லாம் முடியாது. இனிமே நீங்க பூசையெல்லாம் செய்ய வேணாம்' னுட்டாரு. அய்யரு பாவம், நமக்கு எதுக்கு இவங்க கிட்டல்லாம் வம்புன்னு விட்டுட்டாரு. இப்பிடித்தான் நல்லது செய்யாமத் தடுக்கறதுக்கு இங்க நெறயப் பேரு இருக்காங்க. அதனால ஊர்ல திருவிழாவாவது கொண்டாட்டமாவது?" என்று மருது அலுத்துக் கொண்டான்.
சிதம்பரம் அந்தப் புரோகிதரை நினத்துக் கொண்டார்.
மற்றப் புரோகிதர்களிடருந்து அவர் மாறுபட்டவர். உச்சிக்குடுமி, பஞ்சகச்சம், நெற்றியில் சந்தனக் கீற்று என்று தோற்றம் பழமையைக் காட்டினாலும் எண்ணத்தில், செயல் பாட்டில் புதுமை விரும்பி அவர். கொஞ்சம் ஆங்கில அறிவும் உண்டு.
அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் அப்பாவுடன் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். மற்ற எல்லோரையும் அவரவர் ஜாதியை ஒட்டி 'பிள்ளை', 'முதலியார்' என்று அழைத்தாலும் அப்பாவை மட்டும் அவர் 'சார்" என்றே விளித்துப் பேசுவார். அப்பாவும் மற்றவர்கள் மாதிரி அவரை 'சாமி' என்று விளிக்காமல் அவரைப் போலவே 'சார்' என்றே அழைப்பார்கள். அதில் இருவருக்கும் ஒரு அந்நியோன்யம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அவர் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர். அப்பாவுக்கும் ஜோதிடம் தெரியும் என்பதால் அவர்கள் சந்தித்தால் ஜோதிடம் பற்றியோ, அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள நாட்டு நடப்புகள் பற்றியோ பேசுவார்கள். அப்பாவுக்கு இதையெல்லாம் பகிர்ந்துகொள்ள அவரை விட்டால் ஊரில் வேறு யாரும் இல்லை.
முதன் முதலில் ஊருக்குள் கிராமபோன் பெட்டியை வாங்கி வந்தவர் அவர் தான். அத்தோடு அவர் ஒரு சின்ன ரேக்ளா வண்டியையும் வைத்திருந்தார். பக்கத்துக் கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்கையில் அந்த ரேக்ளா வண்டியில்தான் செல்வார். இந்தக் காலத்தில் நகரங்களில் புரோகிதர்கள் மோட்டார் சைக்கிளில் புரோகிதத்துக்குப் போவதை ஆரம்பத்தில் ஆச்சரியமாகப் பார்த்தது போல் அந்தக் காலத்தில் அவர் ரேக்ளா வண்டியை ஓட்டிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள். குதிரையைப் பராமரிப்பதும் அவரே தான். குதிரையைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது, வயற்காட்டுக்குப் போய் புல் அறுத்து வந்து போடுவது, கொள்ளை வேகவைத்துக் கொடுப்பது எல்லாம் அவர்தான். ஆள் வைத்துக் கொள்வதில்லை.
அது மட்டுமல்ல, புரோகிதருக்கு ஊராரால் ஒதுக்கப்பட்டிருந்த கால்காணி மானிய நிலத்தையும் அவரே நேரடியாகப் பயிர் செய்தார். அதற்கும் ஆள் கிடையாது. கூலி ஏர் மட்டும்தான் வைத்துக் கொள்வார். மற்றபடி அண்டை வெட்டுவது, நாற்று நடுவது, அறுப்பது, தாளடிப்பது எல்லாம் அவரும் அவர் பிள்ளைகளும்தான். பூணுலை எடுத்து வலது காதில் சுற்றிக் கொண்டு மண்வெட்டி¨யால் அவர் அண்டை வெட்டும் போது பார்ப்பவர்களுக்கு வலிக்கும். 'காலம் கலிகாலம் என்பது சரியாகி விட்டதே! தர்ப்பையைப் பிடிக்கும் கையால் மன்வெட்டியைப் பிராமணர் பிடிக்கவும் ஆச்சே!' என்று பார்க்கிற மூத்தகுடிகள் ஆதங்கப் படுவார்கள். அவரிடமும் சொல்வார்கள். 'இதில என்ன கௌரவம் வேண்டி இருக்கு? அவங்கவங்க வேலைய அவங்கவங்களே செய்துக்கிறதுலே 'கலிகாலம்' எங்க வந்துது?' என்பார் அய்யர்.
எதிலும் எப்போதும் ஊர்மக்களுக்கு அவர் புருவம் உயர்த்தச் செய்பவராகவே இருந்தார். புரோகிதத்தில் அப்படி ஒன்றும் பெரிதாக வருமானம் வந்துவிடாது. என்றாலும் பெரிய அளவில் தன் மைத்துனியின் கல்யாணத்தை பேண்டு வாத்தியம், சாரட்டில் ஊர்வலம், சங்கீதக் கச்சேரி என்று ஐந்துநாள் கல்யாணமாக அமர்க்களமாக நடத்தி வைத்தார். அந்தத் திருமணம் வெகுநாட்கள் ஊரில் பேசப்பட்டது சிதம்பரத்துக்கு இன்னும் நினைவிருக்கிறது.
அவரது பேச்சு எப்போதும் அறிவார்ந்ததும் சுவாரஸ்யம் மிக்கதாகவும் இருக்கும். சிதம்பரம் அவரது பேச்சை மிகவும் ரசிப்பார். சிதம்பரத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். சிதம்பரம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாய்க் கடைவீதியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. உச்சி வெயிலில் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தார். சிதம்பரத்தை அவர் பார்க்கவில்லை. சிதம்பரம்தான் பார்த்து அருகில் போய்ப் பேசினார்.
சிதம்பரத்தை அங்கே அப்போது சந்தித்ததில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் மிகவும் களைப்போடு இருந்தார். ஓட்டலுக்கு அழைத்துப் போய் காப்பி வாங்கித் தரலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் படு ஆசாரம். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். என்றாலும் தயக்கத்துடனே, 'ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல்ருக்கு. ஒட்டலுக்குப் போயி ஒரு காப்பி சாப்புடலாமா? நீங்க வெளியில எங்கும் சாப்ட மாட்டீங்கண்ணு தெரியும்......." என்று இழுத்தார்.
அவரது சோர்ந்த முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது. "ஆமப்பா! ஏதாவது சாப்டாத் தேவலை தான். வெளியிலே சாப்டறதில்ல தான். ஆனா காலம் மாறச்சே நாமும் மாத்திக்க வேண்டியதுதான். பிராமணாள் ஓட்டல்லியும் அனாச்சாரம்தான்.
என்ன செய்ய? அதப் பாத்தா முடியாதுதான்" என்று சொல்லிவிட்டு உடன் வந்தார்.
சிதம்பரம் அருகில் இருந்த ஓட்டலில் காப்பி வாங்கித் தந்தார். ஆர அமர அதை ரசித்துப் பருகிய பிறகு அவர் முகத்தில் ஒரு தென்பு ஏற்பட்டது. "ரொம்பத் திருப்தியா இருக்கு சிதம்பரம். அதுல பாரு - நம்மக் காசப் போட்டு வாங்கிச் சாப்டா பணம் செலவழிக்க வேண்டி இருக்கேன்னு சாப்ட திருப்தியே இருக்காது. ஆனா இப்படி யாராவது வாங்கிக் கொடுத்து சாப்டா ஏற்படுற திருப்தி இருக்கே அது வேறமாதிரி தான்" என்றார். அதைச் சொல்ல அவர் கூச்சமோ கௌரவமோ பார்க்க வில்லை. மிகவும் யதார்த்தமான வெளிப்பாடு அது.
அவரைப் பற்றிய சிந்தனையினூடே மந்தையின் தெற்குமுனையில் இருந்த அவரது வீட்டைப் பார்க்க விரும்பினார். தெற்குத் தெருவின் தொடக்கத்தில் அது இருந்தது.
"அய்யரு வாழ்ந்த இடத்தப் பாக்கலாம்" என்று மருதுவை அழைத்தபடி நடந்தார்.
"அதுல மட்டும் என்னா பாக்கப் போறீங்க? அதுவும் இப்ப பாழ்மனைதான். அவரோட வாரிசெல்லாம் பொழப்புத் தேடி நாலா பக்கமும் போய்ட்டாங்க. ஆனா அவரு வாழ்ந்ததவிட இப்ப ரொம்ப சௌரியமா இருக்காங்க. அவரோட பேரப் புள்ளைங்க இப்ப புரோகிதத்துக்கு மோட்டார் சைகிள்ல தான் போறாங்க. இந்த ஊர விட்டுப் போனவங்க எல்லாம் புண்ணியவான்கள்தான். நாங்கதான் முன் தலமொறயிலெ பாவம் பண்ணுனவங்க சிலபேரு இன்னும் இங்கியே தடுமாறிக்கிட்டிருக்கிறோம்" என்று மருது மிகவும் நொந்து பேசினான். அந்த அளவு அவனுக்கு அடுத்த தலைமுறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் கசப்பை உண்டாக்கி இருந்தன.
அய்யர் குடியிருந்தது கூரை வீடுதான். சிமிட்டித்தளம் போட்ட தரை. பத்துப் பேர் படுக்க வசதியாய் மழமழ வென்று நீண்ட தெருத்திண்ணை. தோட்டத்தில் கிணறு. சிதம்பரம் வீட்டைத் தவிர அவர் வீட்டில்தான் கிணறு இருந்தது. கிணற்றின் அவசியத்தை உணர்ந்து அவரே இளமையில் வெட்டிக் கொண்டது அது. வீட்டின் பின்னாலேயே மான்ய நிலம். அவர் இருந்தவரை நிறைவாகவே வாழ்ந்தார். இப்போது அவரது நினைவாக எதுவுமில்லை. அவரைப் பற்றிய நினைவு மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த ஏமாற்றம் நெஞ்சில் கனக்க அவர் வீட்டுக்கு இடப்புறம் இருந்த பெரிய ஏரியின் தெற்குத் தெரு படித்துறையை நாடி நடந்தார் சிதம்பரம்.
சின்ன வயதில் மூச்சுப் பிடித்து ஏறிய ஏரியின் உயரமான கரை இப்போது கரைந்து தெரு மட்டத்துக்கு சற்றே உயர்ந்து தெரிந்தது. படிகள் கற்களை இழந்து சரிவான மேடாக ஆகி இருந்தது. கரைமீது ஏறிப் பார்த்தார். அடடா! சின்ன சமுத்திரம் போல அலை அடித்துப் பரந்து இருந்த பெரிய ஏரி இப்போது சின்னக் குட்டை போலச் சிறுத்திருந்தது. கண்ணுக்கெட்டியவரை வேலிக்காத்தான் முட்செடிகள். அதைத் தாண்டி ஏரியைப் பலர் ஆக்கிரமித்து பயிர்செய்திருப்பது தெரிந்தது. ஏரியின் மறுகரையில் ஊருக்கு பெருத்த வருவாய் ஈட்டித் தந்த விழல் கூட்டம் அந்தப் பகுதியிலும் மொண்ணையாய் இருந்தது.
என்ன இப்படி எதைப் பார்த்தாலும் தேய்பிறையாய்த் தெரிகிறதே தவிர வளர்பிறையாய் எதுவும் காணப்படவில்லையே என்று சிதம்பரத்துக்கு மனதை வருத்தியது. இனி பார்க்க எதுவும் இல்லாத நிலையில் ஊர் திரும்பிவிட முடிவு செய்தார். மருதுவுக்குத் அவரது பிரிவு வருத்துவதாக இருந்தது.
அப்புவின் வீட்டுக்குப்போய் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பு முன் அவர் படித்த 'ஐயா'வின் பள்ளி இருந்த இடத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார். பள்ளி இப்போது பழையபடி பொதுச் சாவடியாகி பஞ்சாயத்துக் கட்டடமாக மாறி இருந்தது. பள்ளியின் மேலாக உயர்ந்து பரந்து கவிழ்ந்திருந்த - ஐயா காலத்து ஆலமரம் இருந்த சுவடே இல்லாதிருந்தது. சிதம்பரத்தின் பால்ய நினைவுகளை
அதிகமும் ஆக்ரமித்து அய்யாவின் ஆளுமையை நினைவூட்டிக் கொண்டிருந்த அந்தத் தொன்மையான ஆலமரம் இன்றி, விதவைக் கோலத்தில் காட்சி அளித்த அந்த இடத்தைப் பார்க்கச் சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூட 'ஐயா' இறந்தபோது, மயானத்தில் ஆற்றங்கரையில் நின்று நினத்துப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது. மூன்று தலை முறைக்கு இவ்வூரில் கல்விக் கண் திறந்து வைத்தவரை நன்றி மறந்து நடுத்தெருவில் நாதியற்று சாகவிட்ட ஊராரின் போக்கை ஆற்றின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்ததை நினைத்துக்கொண்டார். 'மனிதர்கள் வருவார்கள் மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் என்றும் இப்படியே போய்க் கொண்டிருப்பேன்' என்று ஓடை ஒன்று சொல்வதாக உள்ள ஆங்கிலக் கவிதையை ஒட்டி, 'சமுதாயம் என்கிற நதியும் அதன் கரையில் வரும் எந்த மனிதரையும் பற்றிக் கவலைப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது' என்று சிந்தித்ததை இப்போது எண்ணிப் பார்த்தார்.
'காலநதியும் அப்படித்தான்; அது மாறாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதன் கரையில் வரும் மனிதர்களும் இடங்களும் மாற்றத்துக்கு உள்ளானாலும் அக்காலக் கட்டத்தின் நினைவுகள் மாற்றம் பெறாது என்றும் நிலைத்திருக்கும்' என்று சிதம்பரத்தின் சிந்தனை ஓடியது.
(நிறைவுற்றது)
Showing posts with label கால் நதிக்கரையில் (நாவல்). Show all posts

Monday, November 19, 2007
Sunday, November 18, 2007
கால நதிக்கரையில்......29
கால நதிக்கரையில்......(நாவல்) - 29
மேல மந்தையை நெருங்குகையில் சிதம்பரம் நின்று அங்கு வலப்புறம் இருந்த அவர்களது சிறிய வீட்டைப் பார்த்தார்.
"என்ன பாக்குறீங்க? இதையும்தான் வித்தாச்சே! இதில பாக்க என்ன இருக்கு? வாங்குனவன் வெளியூர்க்காரன். அவன் அப்படியே போட்டு வச்சிருக்கான். இதுவும் இடிஞ்சுதான் கெடக்கு"
"இதுலதானே எங்க பாட்டி கடேசி காலத்துலே இருந்தாங்க! பாவம், சாகுறப்ப நாங்க எத்தினி பேரப் பிள்ளைங்க இருந்தும் நெய்ப் பந்தம் பிடிக்க சின்னத் தம்பி ஒருத்தனைத் தவிர நாங்க யாரும் இருக்க முடியாமப் போனதை நெனச்சாத் துக்கமா இருக்கு. பேத்திகள் மட்டும் எல்லோரும் இருந்தாங்க" என்று பாட்டிக்காக மனம் கசிந்தார் சிதம்பரம்.
"ஏன்? என்ன ஆச்சு?"
"பெரியண்ணன் தொலைதூரத்தில வேலையிலே இருந்தாரு. மத்த நாங்க மூணு பேரும் காலேஜுல படிச்சிக்கிட்டிருந்தோம். அப்பா எங்க படிப்புக் கெட வேண்டாம்னு அப்ப சேதி அனுப்பலே. எல்லாருக்கும் மறுநாள்தான் கார்டு போட்டி ருந்தாங்க. ஆனா அப்பா தனியாளா அப்ப சிரமப்பட்டதை அப்புறம்தான் தெரிஞ்சு கிட்டோம்" என்று சொல்லிய சிதம்பரம் பாட்டியின் மரணத்தை ஒட்டி அப்பாவுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை நினைவுபடுத்திப் பார்த்தார்.
பாட்டி செத்தபோது உள்ளூர் திரௌபதி அம்மன் திருவிழாவில் பூசாரி தட்டெடுப்பது சம்பந்தமாக பெரியப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சுயஜாதிக் காரர்கள் சிதம்பரம் வீட்டுக்கு நல்லது கெட்டது எதற்கும் போவதில்லை என்று ஜாதிக் கட்டுமானம் செத்ததற்கு உடன் பங்காளிகள் நாலு குடும்பம் தவிர வேறு யாரும் வரவில்லை. பெரியப்பா அதற்கு முன்பே காலமாகி இருந்தார். பெரியப்பா மகன்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்றாலும் நீண்ட நாட்களாய்ப் பேச்சு வார்த்தை இல்லாததால் ஒப்புக்கு அன்று வந்திருந்தார் கள். அவர்கள் எதிர் கோஷ்டியுடன் நெருக்கமான நட்புடையவர்கள். அவர்களால் அப்பாவுக்கு எந்த பலமும் இல்லை.
பறையடிப்பவர்கள், வெட்டியான், வண்ணான், நாவிதன் யாரும் வராதபடி தடுக்கப்பட்டார்கள். இதில் மனதை வருத்தும் விஷயம் என்னவென்றால் - வராத வர்கள், தடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் அதற்கு முதல் நாள் வரை, பாம்புக்கடிக் காகவோ, வேறு மருந்து மற்றும் யோசனைகளுக்காகவோ அப்பாவிடம் வந்து போனவர்கள். அதற்காக அப்பாவிடம் விசுவாசம் கொண்டிருந்தவர்கள். அம்மா அதைச் சொல்லி ஆதங்கப்பட்டதுடன் ஊரின் மிக மூத்த மனுஷியின் கடைசிக் காரியம் எப்படி நடக்குமோ என்று கலங்கி இருக்கிறார்கள். ஆனால் அப்பா கலங்கவில்லை. பண்ணையாட்களை அனுப்பி வெளியூர் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள்.
பக்கத்து கிராமத்தின் பெரிய மிராசுதாரரான அம்மாவின் அக்கா மாப்பிள்ளை, சேதி சொன்ன ஆட்கள் மூலம் நிலைமையை அறிந்து மிக ஆத்திரம் அடைந்தவராய் தன் செல்வாக்கில் இருந்த தன் ஊர் வெட்டியான், பறையடிப்பவர், வண்ணான்,
நாவிதன் இன்னும் அடியாட்கள் பலரோடு வந்து தடுத்தவர்கள் தலை குனியும்படி அமோகமாக இறுதிச் சடங்கை குறைவில்லாமல் நடத்திக் கொடுத்தார். அவரது ஏற்பாட்டின்படி - வெளியூர் உறவினர்களும் உள்ளூர் உடன் பங்காளிகளும் உள்ளூர் பிறஜாதிக்காரர்களுமாய் கூட்டம் அலை மோத, தாரைதப்பட்டை, அதிர் வேட்டு வெடிமுழக்கங்களுடன் 90 வயது வாழ்ந்த பாட்டியின் நிறை வாழ்வை கௌரவிக்கிற மாதிரி - இறுதி யாத்திரை அமர்க்களமாய் நடந்து முடிந்திருக்கிறது.
அப்பாவு வாழ்வும்சரி, சாவும்சரி எளிமையாக இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அவர்களுக்குப் பிறரது கவனத்தை ஈர்க்கும்படியோ படாடோபமாகவோ எதையும் செய்வதில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களால் தடுக்கமுடியாதபடி மாப்பிள்ளையின் தலையீடும், கௌரவப் பிரச்சினையுமாய் அமைந்துவிட மௌனமாய் அதை ஏற்க வேண்டி வந்தது. வராதவர்களை, அவர்களைத் தடுத்தவர்களைப் பற்றி அம்மாவுக்கு மிகுந்த அதிருப்தி இருந்தாலும் அப்பா அவர்கள் மீது கோபப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் வெறும் கருவிகள், நாளையே அவர்கள் தன்னிடம் வருவதை யாரும் தடுக்கக்க முடியாது என்பதை அறிந்தவர்கள். அது அப்படியே ஆயிற்று. பதினாறாம் நாள் காரியம் முடிந்த மறுநாளே அவர்களில் பலர் பாம்புக் கடிக்காகவும் மற்ற வைத்தியத்துக்காவும் கூச்சமின்றி அப்பாவை நாடி வந்தார்கள். அப்பா எந்தவித மனத்தடையும் இன்றி எப்போதும் போல அவர்களுக்கு உதவி செய்து அவர்களை நாணமுறச் செய்ததும் நிகழ்ந்தது.
பதின்ம வயதுக்கு முன்னரே சிதம்பரத்துக்கு பாட்டியுடனான நெருக்கம் குறைந்து போனதால் பாட்டியின் நினைவுகள் முழுமையாய் இல்லை. அப்பா பெரியப்பா இருவரில் அப்பாவிடம் தான் பாட்டிக்கு ஒட்டுதல் அதிகம். பெரியப்பாவின் முரட்டு சுபாவம் அம்மாவையும் நெருங்க விடவில்லை. பேரப்பிள்ளைகளில் சின்ன மகன் குழந்தைகளிடம் பாட்டிக்குக் கொஞ்சம் பாசம் உண்டு. அப்பாவுக்கும் பெரியப் பாவுக்கும் பாகப்பிரிவினை நடந்தபோது பாட்டிக்கு வீட்டின் ஒவ்வொருவர் பாகத்திலும் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. பாட்டி யாரிடம் இருப்பது என்ற பிரச்சினைக்குப் பாட்டியே முடிவு செய்தபடி பெரியப்பா வீட்டு அறையில் சாமான்களை வைத்துக் கொண்டு அப்பா பகுதியில் உள்ள அறையில், தானே சமைத்துக்குக் கொள்ள ஏற்பாடாயிற்று. பாட்டி தன்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம் என்பதோடு மருமகள் இருவரிடமுமே சுமுகமான உறவு இல்லாததாலும் பிடிவாதமாக தன்னை ஏலம் போடுவதை ஏற்கவில்லை. மிகவும் தள்ளாமை வந்தபிறகும் கண்பார்வை மங்கியபோதும் பாட்டி யாரிடமும் இருக்கப் பிடிவாதமாக மறுத்து விட்டார். அதனால் அப்பாவே கொஞ்ச நாட்கள் பாட்டிக்குச் சமைத்துப் போட்டிருக்கிறார்கள். பிறகுதான் பாட்டி விரும்பிய படி மேல மந்தைக்கு அருகில் இருந்த அப்பாவின் பாகத்தில் இருந்த வீட்டைச் செப்பனிட்டு பாட்டியை அதில் இருக்கச் செய்து, சமைத்துப் போடவும் கூடமாட உதவிக்கு அருகில் இருக்கவும் பங்காளி வழியில் ஒரு மூதாட்டியை அப்பா ஏற்பாடு செய்தார்கள்.
பின்னாளில் சிதம்பரம் அம்மாவிடம் பாட்டியைத் தள்ளாத வயதில் அப்படித் தனியாக விட்டதற்காகக் குற்றம் சாட்டும் தொனியில் பேசிய போது அம்மா, தன் ஆதங்கத்தை ஒரு குற்றச்சாட்டுபோல் சொன்னது நினைவுக்கு வருகிறது. "நானா வச்சிக்க மாட்டேன்னேன்? அவங்கதான் ஒத்துப்போவலே! அந்தக் காலத்துலே உங்கப் பாட்டி என்னை எப்பிடிப் படுத்தி வச்சாங்கன்னு ஒனக்குத் தெரியுமா? கல்யாணமான புதிசுலே, புள்ளாயார் சுத்திக்கு நா செஞ்ச கொழுக் கட்டைய எடுத்துக்கிட்டு ஊடுஊடாப் போயி 'மருமவ செஞ்சிருக்கிற கொழுக்கட்ட லட்சணத் தப் பாத்தியா?' ன்னு காட்டுனவங்கதானே?" என்று எல்லா மருமகள்களையும் போலப் பழங்கணக்குகளைப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் பாட்டி இந்த வீட்டில் இருந்தவரையில் - அம்மாவிடம் பேசாது இருந்தபோதும் - அம்மா ஊருக்குப் போயிருந்த சமயங்களில் பேரப்பிள்ளைகளை அனுசரணையாய்க் கவனித்துக் கொண்டது சிதம்பரத்துக்கு ஞாபகம் இருக்கிறது.
பேரப்பிள்ளைகளை உட்கார வைத்து காலையில் பழைய சோற்றைப் பிழிந்து தட்டுகளில் போடும்போது சமயத்தில் சன்னமான புழு இருப்பதுண்டு. புழு இருந்து விட்டால் தம்பி துள்ளிக் குதிப்பான். அதை அப்படியே அள்ளி வெளியே குத்தாகப் போடுவான். பாட்டி, "அடேய்! சோத்தை எறைக்காதே! ஒரு பருக்கையை எறச்சா ஒம்பது நாளு பட்டினி கெடக்கணும்!" என்று அவனைக் கண்டிப்பார்.
அப்போது அது மிரட்டல் மாதிரிதான் இருந்தது. பின்னாளில் இரண்டாவது உலகப்போரின் போது கடுமையான ரேஷன் வந்தபோது மக்கள் அரிசி கிடைக்காமல் கோதுமையையும், சோளத்தையும் சமைத்துச் சாப்பிட வேண்டி வந்தபோது பாட்டி
யின் எச்சரிக்கை உண்மையாயிற்று. கோயம்புத்தூர் விவசாயக்கல்லூரியில் படித்த சின்ன அண்ணன் விடுதியில் அரிசிச் சோறு போடும் நாட்களில், பட்டை போட்ட அளவுச் சோற்றின் ஒரு பருக்கையைக் கூடச் சிந்தாமல் சாப்பிட நேர்ந்ததைச் சொல்லி 'பாட்டி வாக்குப் பலித்துவிட்டது' என்று சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
தம்பி இன்னொரு வகையிலும் பாட்டிக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வான். வீட்டுக்குள் தாழ்வாரத்தில் அமர்ந்து பாட்டி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கையில் பாட்டியின் நீட்டிய கால்கள், நடந்து போகத் தடையாயிருக்கும். சிதம்பரமோ மற்ற பிள்ளைகளோ அப்போது பாட்டியைச் சிரமப்படுத்தாமல் ஒதுங்கிப் போவார்கள். ஆனால் தம்பி அப்படி ஒதுங்கிப் போகாமல் ஒரே தாவாகப் பாட்டியின் கால்களைத் தாண்டித்தான் போவான். குனிந்து அரிசியில் கல்பொறுக்கிக் கொண்டிருக்கும் பாட்டி நிமிராமலே "ஆருடா சின்னக் காளையா?" என்று கேட்பார் கள். ஆனால் தம்பி அதையெல்லால் லட்சியம் செய்ய மாட்டான்.
பாட்டிக்கு ஒரு பெரிய மரப்பெட்டி அப்பாவின் பகுதியில் இருந்தது. ஒரு ஆள் தாராளமாய்ப் படுத்து புரளும் அளவுக்கு அகலமும் நீளமும் கொண்ட இடுப்பளவு உயரம் கொண்ட பெட்டி அது. அதில்தான் பாட்டியின் பாத்திர பண்டங்களும் இதர பொருள்களும் இருந்தன. அதன் கதவைத் தூக்கி நிமிர்த்துவது கஷ்டமாக இருக்கும். ஆனாலும் பாட்டி தினமும் அதை இரண்டு மூன்று தடவைகளாவது திறக்காமல் இருப்பதில்லை.
பாட்டியின் செருவாட்டுப் பொக்கிஷமும் அதில் தான் இருந்தது. ஒரு பெரிய சுருக்குப் பை நிறைய அந்தக் காலத்து வெள்ளி ரூபாய் நாணயங்கள் - ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மொட்டைத்தலை பதித்த கனமான நாணயங்கள் - அதில் இருந்தன. யாரும் இல்லாத நேரமாய் பாட்டி அதை எடுத்து நீட்டிய கால்களுக்கிடையே வைத்து எண்ணிப் பார்ப்பது தினசரி நிகழ்ச்சி. அம்மாவோ பிள்ளைகளோ யாராவது வந்து விட்டால் விரித்த கத்தரிக்கோல் மூடிக் கொள்கிறமாதிரி பாட்டியின் நீட்டி விரித்த கால்கள் நெருங்கி சுருக்குப் பை மறைக்கப்பட்டுவிடும். 'அப்படி தெனமும் என்னதான் அதுல பாக்குணுமோ? கால் மொளச்ச ஓடியாப் போயிடும்?' என்று அம்மா அதை விமர்சிப்பதுண்டு. பாட்டி தினமும் எண்ணிச் சரிபார்க்க வேண்டிய அவசியமே இல்லைதான். பூட்டப்பட்ட பெட்டியின் பெரிய சாவி எப்பொழுதும் பாட்டியின் இடுப்பிலேயே சொருகப் பட்டிருக்கும். அப்படியே சாவி கிடைத்தாலும் யாரும் பெட்டியைத் திறக்கப் போவதில்லை. ஆனாலும், கண்பார்வை மங்கிய காலத்திலும்கூட, தடவித்தடவி எண்ணிப் பார்ப்பதை பாட்டி நிறுத்தியதில்லை. ஆனால் அப்படிப் பார்த்துப் பார்த்து பூட்டி வைத்த பணம் பாட்டியுடனேயே போய்விடவில்லை தான்.
வெள்ளிப் பணங்கள் நிறைய பாட்டியிடம் இருப்பது தெரிந்த பெரியப்பாவின் பிள்ளைகள் பாட்டி செத்தபிறகு பங்கு கேட்டுத் தகராறு செய்வார்களோ என்று அம்மா பயந்ததுண்டு. ஆனால் பாட்டியின் சாவை ஒட்டிய கரும காரியங்களுக்கான செலவிலும் பங்கேற்க வேண்டி வரும் என்று அவர்கள் அதை கிளப்பாமல் விட்டு விட்டார்கள். அப்பாவின் மறைவுக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்கு மேலாய் அம்மா அதைப் பத்திரமாய் வைத்திருந்து பிள்ளகள் அனவருக்கும் தலைக்கு பத்து வெள்ளிப் பணம் என்று பாட்டியின் நினைவாக வைத்துக்கொள்ளக் கொடுத்தார்கள். அப்போதே அதன் விலை அதிகம். அசல் வெள்ளி நாணயம் என்பதால் ஒன்றே ஐம்பது ரூபாய்க்கு மேல் விலை போவதாக இருந்தது. அந்தப் பணத்தில் ஒரு நாணயத்தை மட்டும் இன்னும் சிதம்பரம் பாட்டியின் நினவாக வைத்திருக்கிறார்.
பாட்டிக்கு சிதம்பரத்தையும் சின்ன அண்ணனையும்தான் பிடிக்கும். பெரியண்ணன் குழந்தையிலிருந்தே பெரியம்மா வீட்டில் வளர்ந்ததால் அதிகம் பாட்டியுடன் பழக்கமில்லை. சின்னண்ணன் கல்லூரியிலிருந்து வரும்போது வாங்கிவரும் பழங்களில் பாட்டிக்கென்று தனியாக எடுத்துப்போய்க் கொடுப்பார். அப்பா சிதம்பரத்தையும் அப்படி விடுமுறையில் வரும்போது 'நீ வாங்கிக்கிட்டு வந்த பழத்துலே கொஞ்சம் கொண்டு போயி பாட்டிக்குக் குடுத்துட்டு விசாரிச்சுட்டு வாடா' என்பார்கள். தான் தனித்துப் போய்விடவில்லை, பேரப் பிள்ளைகள் பாசமாய் இருக்கிறார்கள் என்று பாட்டிக்கு ஒரு ஆறுதல் ஏற்படட்டும் என்பதற்காக அப்பா அப்படிச் சொல்வார்கள். சிதம்பரமும் அப்படியே செய்வார். ஆனால் பாட்டி பரப்பிரும்மம் போல. அதற்கெல்லாம் பூரித்துப்போவதோ, பேரப்பிள்ளைகள் தன்னை வந்து பார்க்காது போனாலும் அதுபற்றி ஆதங்கப்படுவதோ இல்லை. அப்படித்தான், தனக்கு பேரப்பிள்ளைகள் எல்லோரும் வந்து நெய்ப் பந்தம் பிடிக்காதது பற்றியும் லட்சியம் பண்ணி இருக்கப் போவதில்லை என்று பட்டது.
"வா, போகலாம்" என்று திரும்பி, மருதுவுடன் சிதம்பரம் நடந்தார். மேல மந்தைக்கு வந்து மாரியம்மன் கோயில் எதிரே கொட்டப்பட்டிருந்த மணலில், அடர்ந்து கவிந்திருந்த வேப்ப மரநிழலில் அமர்ந்தார்கள்.
(தொடரும்)

கால நதிக்கரையில்.....28.
கால நதிக்கரையில்......(நாவல்) - 28
சிதம்பரம் வீட்டுக்கு நேர் எதிரே தெருவின் மறுபக்கத்தில் நின்றிருந்த அந்தக் கல்க்கம்பத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உண்டு. அது தெருவிளக்குக்கான கம்பம். அதில் கண்ணாடிக் கூண்டு வைத்து முன்பெல்லாம் அதனுள் இரவில் விளக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அது வெகுகாலத்துக்கு முன்பாக இருக்கலாம். சிதம்பரத் துக்கு நினைவு தெரிந்த நாளாய் அதில் விளக்குக் கூட்டைக் கண்டதில்லை. கூண்டைப் பொருத்த ஒரு இரும்பு முளை மட்டும் கல்த்தூணின் உச்சியில் இருந்தது. பிற்பாடு அந்தக் கல்த்தூண் சிதம்பரம் வீட்டுக்கு அடையாளச் சின்னம் ஆகிப் போனது.
கிராமப் பஞ்சாயத்து எல்லாம் வரும் முன்னர் ஊர்ப் பெருந்தனக்காரர் ஒருவரை 'உஷார்க் கமிட்டி' என்ற ஒரு கண்காணிப்புக் கமிட்டியின் தலைவராக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் நியமித்திருக்கிறார்கள். வரிவசூல் செய்வது
மணியக்காரர் பொறுப்பு. மற்றபடி ஊரின் நல்லது கெட்டது எல்லாம் கவனிப்பது தலைவர் தான். அது கௌரவ உத்தியோகம். சிதம்பரத்தின் பெரியப்பா 'உஷார்க் கமிட்டி'த் தலைவராக வெகு நாட்கள் இருந்தார். அதனால் விளக்குக் கம்பம் அவர்
வீட்டுக்கு எதிரே அமைக்கப் பட்டது. அதுவே தலைவர் வீட்டு அடையாளம் ஆயிற்று.
உஷார்க் கமிட்டி என்ன வேலை செய்ததோ சிதம்பரத்துக்கு நினைவில்லை. ஆனால் ஊரில் நடக்கும் சண்டை, வம்பு வழக்கு தலைவரிடம் பஞ்சாயத்துக்கு வரும். யார் வீட்டிலாவது திருட்டுப் போய், திருடன் அகப்பட்டால் திருடனைப் பிடித்து வந்து தலைவர் வீட்டுக்கு எதிரே உள்ள கல்த்தூணில் கட்டி விடுவார்கள். தலைவர் விசாரித்து அபராதமோ தண்டனையோ வழங்குவார். அந்த வழக்கம் காரணமாய், எந்த இருவருக்குள்ளாவது தகராறு வந்தால், 'நடுத்தெருப் புள்ள வீட்டுக் கல்த்தூண்ல புடிச்சுக் கட்டிடுவேன், ஆமாம்!' என்று சவால் விடுவது சகஜமாயிற்று.
பெரியப்பா காலையில் எழுந்து தெருவுக்கு வந்ததும் அவர் கண்ணில் படுவது விளக்குக் கம்பத்தில் கட்டப் பட்டிருக்கும் திருடனும், அவனுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை வேடிக்கை பார்க்கக் காத்திருக்கும் கும்பலும்தான். பெரியப்பா வீட்டுக் குறட்டில் நீளமான புளியம் கொப்புகள் - பத்துப் பதினைந்து போல வெட்டி வைக்கப் பட்டிருக்கும். திருட்டுக் கொடுத்தவன் தயார் செய்து வைக்க வேண்டிய சாங்கியம் அது.
பெரியப்பா கொஞ்சம் தாமதமாக காலை 8 மணியளவில் தான் எழுந்து தெருவுக்கு வருவார். சாதாரணமாகவே அவர் ரொம்பவும் கோபக்காரர். இரக்கம், தயை, தாட்சண்யம் அவரது பார்வையில் இருக்காது. விசாரணை எதுவுமே இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே தண்டனை தான். அதனால் பெரியப்பாவைப் பார்த்ததுமே குற்றவாளி நடுங்கிக் குற்றுயிராகிவிடுவான்.
முழங்காலுக்கு சற்று மேலே நிற்கிற மாதிரி நெஞ்சுவரை உயர்த்திக் கட்டிய நாலு முழ வேட்டி மட்டும் தான் அப்போது அது அவரது உடை. எலும்புகள் துருத்தி நிற்கும் நெஞ்சுக் கூட்டை முன்னிறுத்தியவாறு வந்து திண்ணையில் உட்காருவார்.
உடனே திருட்டுக் கொடுத்தவன் முன்னால் வந்து திருட்டு நடந்த விவரம் சொல்லிகையும் கªவுமாய்த் திருடனைப் பிடித்ததைச் சொல்லுவான். அவ்வளவுதான்! 'குபீலெ'னப் பெரியப்பா எழுவார். எதிர்ச் சாரிக்கு வேகமாய் நடந்து போய் கல்த்தூணில் கட்டப்பட்டு பயத்தால் மிரட்சியுற்றிருப்பவனை ஒரு பயங்கர பார்வை - இரைமீது பாயப் போகும் கொடிய விலங்கு போலப் பார்ப்பார்.
அதற்குள் பிராது கொடுத்தவன் புளியங் கொப்புகளை ஏந்தியபடி பின்னே வந்து நிற்பான். திருடும்போது கையும் கªவுமாய்ப் பிடிபட்ட தகவல் மட்டும் போதும். குற்றம் சாட்டப் பட்டவனிடம் எதுவும் கேட்க வேண்டியதில்லை அவருக்கு.
''குடுறா..!'' என்ற அதட்டல் ஒலி அவரிடமிருந்து எழும். அவரது நீட்டிய கையில் நீண்ட புளியங்கொப்பு வைக்கப்படும். அடுத்த கணம் 'வீல்' என்ற அலறல் தான் கேட்கும். பயப்பிராந்தி எல்லோர் கண்களிலும் தெரியும். அடி என்றால் அப்படி ஒரு ஆவேசமான அடி! உடல் முழுக்கக் கண்மூடித் தனமான விளாசல்! ஏதோ அவரை எதிரி தாக்கியதுபோலவும் அதில் வெறி கொண்டு அவனை விளாசுவது போலவும் இருக்கும். ரத்தம் பீரிட்டுப் பெருகி வழியும். மரண ஓலம் போல அடிபடுகிறவனின் அலறல் இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு அவர்கள் மீது விழும் அடிபோல உடல் நடுங்கும். ஆனாலும் தடுப்பவர் எவரும் இலர். அந்தக் காலத்தில் கிரேக்கத்தில் அடிமைகள் மீது பசித்த சிங்கத்தை ஏவி விட்டுக் கடித்துக் குதறச்செய்வதை வேடிக்கை பார்த்த மக்கள் போலத்தான் இங்கும். 'என்ன கொடுமை இது?' என்று சிந்திக்கவும் கூடாமல் அத்தனை பேரும் வேடிக்கைக் காட்சி போலப் பார்த்ததுதான் பெரிய கொடுமையாக சிதம்பரத்துக்கு அந்த வயதில் பட்டது. சில சிறுபிள்ளைகள் கோரக்காட்சியைக் கண்ட பயத்தில் அலறி அழுவார்கள்.
கை ஓயும் வரை அல்லது அடிபடுகிறவன் மயங்கி விழும் வரை அடி நிற்காது. நாலைந்து கொப்புகள் ஒடிந்து வீசப்பட்டுவிடும். அப்புறம்தான் கையிலிருக்க்¢ற கொப்பை வீசி எறிந்துவிட்டு, "அவுத்து உடுடா!" என்று ஓய்வார். அதற்குள் அவர் கை அசந்தும் கால் தொய்ந்தும் களைத்துப் போனவராய் 'பொத்' தென்று திண்ணையில் வந்து விழுவார். மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கும்.
இத்தனைக்கும் அடி பட்டவன் 'பூ...' என்று வேகமாக ஊதினால் ஒரு கஜம் தள்ளிப் போய் விழுகிற நோஞ்சான் உடம்பு அவருக்கு. ஆனால் கட்டப்பட்டவனிடம் பயம் எதற்கு? கட்டப்படாதிருந்தாலும் கூட அவன் அவரை எதிர்க்க முடியுமா?
பிறகு வழக்கமான நடைமுறைப்படி பெரியப்பா வீட்டிலிருந்து கொடுக்கப்படும் எண்ணெயை வாங்கி அடிபட்டு ரத்தம் கசியும் இடங்களில் தடவி ஒத்தடம் கொடுப்பதும் பெரியப்பா விட்டெறியும் காசை வாங்கிப்போய் வலி மறக்க அவனுக்குக் கள் வாங்கிக் கொடுப்பதும் அவனைச் சேர்ந்தவர்களின் பொறுப்பு.
இத்தகைய குரூரத் தண்டனையைப் போலீசில் புகார் செய்யவும் முடியாது. அந்தளவு பெரியப்பாவுக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருந்தது. இப்போது எண்ணிப் பார்க்கையில் சிதம்பரத்துக்கு அந்தக் கொடுமைக்காரரின் தம்பி மகனாக இருந்து
விட்டதற்கான குற்ற உணர்ச்சி எழுகிறது. வீழ்ந்து புதைந்து கிடக்கும் கல்க்கம்பத் தைப் பார்க்கிறார். பெரியப்பாவும் அவரது குரூரமுமே சாய்க்கப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பது போலத் தோன்றுகிறது.
கண்மூடித்தனமாக அடித்தாலும் கை மார்புக்கு மேல் எழாமல் கவனமாய் இருப்பார் பெரியப்பா. அதனால் உயிராபத்து ஏதும் நிகழ்ந்ததில்லை. உணர்ச்சி வசப்படாமல் எந்திரத்தனமாய் தண்டனை இருக்கும் என்பதால் அவருக்கு எந்தப்
பழியும் வந்ததில்லை.
ஆனால் அடுத்த ஊரில் பெரியப்பாவைப் பார்த்து இப்படிக் கட்டிவைத்து அடித்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆள் செத்துப் போனான். அதற்குக் காரணம் உணர்ச்சி வசப்பட்டு, பின் விளைவுகளைச் சிந்திக்காமல் கத்துக்குட்டித்தனமாக
கண்டபடி அடித்ததால் ஒரு அடி செவிப்பொட்டில் பலமாய் விழுந்து ஆள் செத்து விழுந்தான். ஆவேசம் தணிந்த பிறகுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது. அடித்தது ஒருவர் மட்டுமல்ல, இரண்டு மூன்றுபேர் என்பதால் கிலி பிடித்து மிரண்டவர்களுக்குத் தென்பு ஏற்பட்டது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, செத்தவன் வெளியூர் ஆள் என்பதால் அவசர அவசரமாய் செய்தி பரவுவதற்குள் உடலைக் கொளுத்தி விட்டார்கள். ஊர் ஒரே ஜாதிக்காரர்களைக் கொண்டது என்பதால், கட்டுக்கோப்பாக செய்தி வெளிப்படாமல் அழுத்தி விட்டார்கள். மணியக்காரருக்கு லஞ்சம் கொடுத்து அவர் புகார் செய்யாமல் சரிக்கட்டி விட்டார்கள்.
ஆனாலும் எப்படியோ விஷயம், செத்தவனின் ஊர் ஆட்களுக்குத் தெரிந்து போலீசுக்குப் போய் புகார் கொடுத்து விட்டார்கள். போலீஸ் வந்து தலைவரையும் அவரது கூட்டத்தையும் பிடித்துப்போய் வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி
விட்டார்கள். போலீசுக்குத் தகவல் தராமல், உடலைக் கொளுத்துவற்கு உடந்தையாய் இருந்த மணியக்காரரும் கம்பி எண்ண வேண்டியாதாயிற்று. வெள்ளைக்காரன் காலத்துப் போலீஸ் என்பதால் சரிக்கட்ட முடியாது போயிற்றோ என்னவோ?
ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகள் பத்து வருஷம் போல கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து நாய்ப் படாத பாடுபட்டு, சொத்துக்களை விற்று வழக்கை நடத்தி, கடைசியில் சாட்சி சொல்ல ஆள் இல்லாததால் ஒரு வழியாய் விடுதலை ஆனார்கள். முன்யோசனை இல்லாத முரட்டுத்தனம், வறட்டு அதிகார போதை காரணமாய் இளமையையும் சொத்துக்களையும் இழந்ததுதான் மிச்சம் பாவம்!
இதில் சம்பந்தப் பட்ட மணியக்காரர்பாடுதான் பரிதாபத்திற்குரியது. அவர் சிதம்பரம் ஊர்க்காரர்தான். எதிலும் ஜாக்கிரதையும் கவனமும் காட்டுபவர்தான். ஆனாலும் கனத்த தொகை நீட்டப்பட்டதால் வசமிழந்து சிக்கிக் கொண்டார்.
கொலை நடந்த ஊர்க்கார்கள் ஒட்டு மொத்தமாய் ஜாதி விசுவாசத்தால் கொலைகாரர்களுக்கு அனுசரனையாய் ஆதரவாய் இருந்தார்கள். ஆனால் மணியக்காரருக்குச் சொந்த ஊரில் எந்தப் பிடிப்பும் அனுதாபமும் இல்லை. தன் ஊரிலிலேயே கொஞ்ச நாட்கள் மணியம் பார்த்தபோது தாட்சண்யம் காட்டாமல் பலரது பகைமையைச் சம்பாதித்துக் கொண்டவர். அதனால் கொலை வழக்கில் அவர் சிக்கிக் கொண்டதில் ஊரில் அநேகருக்கு மகிழ்ச்சிதான். அவர் தலைமறைவாய் அலைந்த போதும் பணி நீக்கம் செய்யப் பட்ட போதும் சொந்த பந்தங்களின் அனுதாபம் கூடக் கிட்டவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.
அவர் ஊர்ப் பெரியவர்களின் வெறுப்பையும் சொந்த சாதிக்காரர்களின் பகைமையையும் சம்பாதித்திருந்தார். யாருக்கும் கட்டுப் படாத சுபாவம். தெய்வ பக்தி, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பேணுதல் எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவரது அப்பா இறந்தபோது பதினாறாம் நாள் காரியம் கூட அவர் செய்யவில்லை. பிறகு திதி, திவசம் எதுவும் செய்யவில்லை. 'பெத்த தகப்பனுக்கு திவசம் கூட செய்யாத பாவி - அந்த பித்ரு சாபம்தான் இப்பொழுது கொலைக்கேசில் சிக்கிச் சீரழிகிறான்' என்பது பெரியவர்களின் தீர்ப்பு.
அப்பொழுது சிறுவனாய் இருந்த சிதம்பரத்துக்கும் அவர் தன் அப்பாவுக்குக் கருமகாரியம், திவசம் எல்லாம் செய்யாதது பெரிய குற்றமாகத்தான் பட்டது. இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தால் அவர் மீது அனுதாபமே எழுகிறது.
இன்று தானும் சகோதரர்களும் வந்திருக்கிற முடிக்கு அவர் ஐம்பது வருஷத்துக்கு முன்பே வந்திருந்தது இப்போது குற்றமாகப் படவில்லை. அப்பா ஆசார அனுஷ்டானங் கள் மிக்கவர்கள். மிகுந்த தெய்வ பக்தியும் தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். தினசரி சிவபூஜையும் அனுஷ்டானமும் தவறாது செய்தவர்கள். பிள்ளைகளையும் அப்படியே வளர்த்தவர்கள். இருந்தும் பின்னாளில் எல்லா சகோதரர்களும் வெகு தொலைவில் வேறுவேறு இடங்களில் வாழ்ந்ததால் அப்பா அம்மா திதிக¨ளை சிறிது காலத்துக்குப் பின் தொடர முடியாமல், பக்கத்து நகரில் இருந்த ஒரு அநாதைச் சிறுவர் இல்லத்துக்கு ஒரு பெருந்தொகையைக் கட்டி ஆண்டு தோறும் அவர்கள் நினைவு நாட்களில் ஒருநாள் முழுதும் அநாதைச் சிறுவர்க்கு உணவிட ஏற்பாடு செய்து தம் பித்ருக் கடனைத் தீர்க்க வேண்டிவந்ததை இப்போது எண்ணிப் பார்த்தார். அப்பாவுக்கும் இந்த திதி திவசங்களில் பெரிதும் நம்பிக்கை இல்லாததால், இப்படி ஏழைச் சிறுவர்களுக்கு அவர்கள் நினைவாக உணவிடுவது ஏற்புடையதாகத்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொண்டார்கள். ஆனால் இயலாமையாலோ, நம்பிக்கை இன்மையாலோ அப்போது மணியக்காரர் தன் பித்ருக் கடனைச் செய்யாததைக் குற்றமாகக் கருதியதை எண்ணி இப்போது உறுத்தல் ஏற்பட்டது.
"கிளம்பலாமா?" என்று மருது அவரை எழுப்பினான். எழுந்து மேல மந்தையை நோக்கி நடந்தார்கள்.

Saturday, October 13, 2007
கால நதிக்கரையில் - 27
கால நதிக்கரையில்......(நாவல்)-27
- வே.சபாநாயகம்
தெருக் குறட்டிலிருந்து சிதம்பரத்தின் பார்வை பூட்டி இருந்த தெருக் கதவுக்கு மாறியது. இந்த வாயிற்படி பின்னால்தான் அமைக்கப்பட்டது. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகம் பிரிக்கப்பட்டபோது கூட இப்படித் தனித் தனித்தனி வாயில் இல்லை. பெரிய வீட்டின் மேலண்டைப் பகுதி நடைமுறை வழக்கப்படி மூத்தவரான பெரியப்பாவுக்கும், கீழண்டைப் பகுதி இளையவரான அப்பாவுக்கும் ஒதுக்கப்பட்டது. முன் வாசற்படி மட்டும் பொது. மற்ற புழக்கம் எல்லாம் அவரவர் பகுதியில் இருந்தது. பெரியப்பா காலம் வரை அப்படியேதான் இருந்தது. அவரது காலத்துக்குப் பின் அவரது இரண்டு மகன்களும் பாகம் பிரித்துக் கொண்டபோது அந்தப் பகுதி பெரியண்ணனுக்கு விழுந்தது. அவர் தன் பகுதியைத் தனியே பிரித்துக் கட்ட விரும்பியதால் பழைய வாயிற்படியின் நடுப்பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு இப்போதுள்ள மாதிரி இந்த வாசற்படி அப்பாவால் அமைக்கப்பட்டது.
இப்போது பலரது காலடிகளின் கீழே மிதிபடுகிற - இந்த வாசற்படிக்குப் பின்னால் இருக்கிற பகுதி முன்பு சின்னக் கூடமாக இருந்தது. அதுதான் சிதம்பரமும் அவரது உடன்பிறப்புகளும் ஜனித்த இடம். அம்மாவின் தலைப்பிரசவம் தவிர மீதி ஒன்பது பிரசவங்களும் அங்கு தான் நிகழ்ந்தன. வாசற் படியைத் தாண்டியதும் இருந்த வலது புறத்துக் கூடம், முற்றம் வரை தட்டியால் மறைக்கப்பட்டு பிரசவ அறையாகி விடும். முற்றத்தில் இறங்கித்தான் உள்ளே போக முடியும். அப்போதெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் பிரசவம் பார்க்கச் செல்வதில்லை. ஆஸ்பத்திரிகளும் அபூர்வமாய்த் தொலைவில் நகரத்தில் இருந்தன. போக்குவரத்து வசதியும் இல்லை. உள்ளூர் மருத்துவச்சிதான் எல்லாப் பிரசவத்துக்கும்.
புண்ணியாக வாசனம் வரை அம்மாவின் அக்கா, இளம் வயதில் விதவை ஆன ஒரு பெரியம்மாதான் எல்லாப் பிரசவத்துக்கும் வந்து இருந்தார்கள். அம்மா ஆரோக்கியமான அந்தக்காலத்து மனுஷி என்பதால் எல்லாப் பிரசவமும் சுகப் பிரசவம்தான். அதுவே ஊரில் மற்றப் பெண்களுக்கு அம்மாவிடம் ஒரு மரியாதையை - பத்துப் பிள்ளைகளையும் ஆரோக்கியமாய்ப் பெற்றெடுத்து ஆளாக்கிய நிறைவான மனுஷி என்று - ஏற்படுத்தியது. பொறாமையோ கண்ணெறியோ யாருக்கும் அப்போதெல்லாம் ஏற்பட்டதில்லை. அதைப் பெரிய கொடுப்பினையாக நினைத்தார்கள்.
அப்பா பெரிய பூஜை செய்பவர்கள் என்பதால் புண்ணியாக வாசனம் வரை, வீட்டுக்குள் பூஜை செய்வதில்லை. எதிர் வீட்டில் பூஜை செய்துவிட்டு வீட்டின் முன் வாயில் வழியாக நுழையாமல் பின்பக்கத்து வழியாகத்தான் வீட்டுக்குள் வந்து சாப்பிடுவார்கள். அந்த நாட்களில் அப்பா தீட்டு என்று கோவிலுக்கும் போக மாட்டார்கள்.
அம்மாவை இப்போது நினக்கும்பொது சிதம்பரத்துக்கு மலைப்பாக இருக்கிறது. இன்றைய நடைமுறைப்படி இரண்டு பிள்ளைக¨ளையே தங்களால் நல்லபடி வளர்த்து ஆளாக்கத் தடுமாறும் போது அம்மா பத்துப் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க என்ன பாடு பட்டிருக்க வேண்டும்? வாழ்நாளில் பாதியைப் பிள்ளைப் பேற்றிலும் பிள்ளைகளை வளர்ப்பதிலுமே கழித்து விட்ட அம்மாவை நினத்தால் மனம் கனக்கிறது.
வேலைக்குப் போன பிறகு சிதம்பரம் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியதும் அம்மாவின் குரலைத்தான் முதலில் அதில் பதிவு செய்தார். ஒரு பேட்டி போல அம்மாவிடம் பேசிப் பதிவு செய்தபோது அம்மாவிடம் சிதம்பரம் கெட்டார்: "இப்ப எங்கியும் குடும்பக் கட்டுப்பாடுன்னு வந்துட்டுது. 'ஆசைக்கு ஒர் பொண்ணு ஆஸ்திக்கு ஒரு பிள்ளைன்னு' ரெண்டு போதும்; அதிகம் பிள்ளைங்க பெத்துக்கிட்டு அவஸ்தப்பட வேணான்னு சர்க்காரே சொல்றாங்களே- நீங்க பத்து பிள்ளைங்க பெத்துக்கிட்டது சங்கடமா இல்லியா? அதுக்காக நீங்க கூச்சப் படலியா?"
அம்மாவிடம் பிள்ளை கேட்கிற கேள்வி இல்லைதான் அது. ஆனாலும் அம்மா அதுபற்றிக் கூச்சப்படாமல். ''இதுல என்னா சங்கடம், என்னா கூச்சம் இருக்குது? வீடு நெறையா புள்ளைங்க இருக்கிறது ஒரு அழகுதான். 'ஒரு மரம் தோப்பாவுமா ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா' ம்பாங்க. ஒரு நல்லது கெட்டதுண்ணா ஒண்ணாக் கூடி சந்தோஷப்படவும் கட்டிக்கிட்டு அழவும் ஒடன் பிறப்புன்னு இருந்தா அது ஒரு பலந்தான். ஒரு பிள்ளயா இருந்தா அது கெடைக்குமா?" என்றார்கள்.
"அதில்ல, இப்ப வெலைவாசி இருக்குற நெலைமையிலே ரெண்டு பிள்ளை களையே வளக்க எங்களுக்குக் கஷ்டமா இருக்கே, நீங்க எப்படி பத்து பிள்ளை களையும் வளத்தீங்க? கஷ்டமா இல்லியா?'
"இதுல என்னா கஷ்டம்? 'கொடிக்குக் காய் பாரமா'ம்பாங்க. இப்ப மாதிரியா? வீட்டுலே நெல்லு வெளைஞ்சது, எள்ளும் கடலையும் வீடு கொள்ளாம எறஞ்சுது. செலவுக்குக் கஷ்டமில்ல; அதோட இப்ப இருக்கிற பிள்ளைங்க மாதிரியா? மூணு அணாவுக்கு அழவாரத்தான் கைத்தறித் துண்டு வாங்கிக் குடுத்தா நீங்கள்ளாம் கட்டிக்கிட்டீங்க. உங்க பிள்ளைங்க எல்லாம் இப்ப டெரிலினும் டெரிகாட்டும் கேக்குதே! காலைலே குளிப்பாட்டி பாலக் குடுத்து, எதிர்த்த வீட்டு வள்ளிமை அக்காக் கிட்டியோ பக்கத்து வீட்டு கார்மாங்குடி புள்ள வீட்டிலியோ உட்டுட்டு வந்தா சமத்தா அழாம நீங்க இருந்திங்களே- இப்ப உங்க பிள்ளைங்க அப்பிடி இருக்குமா? அதும் மாதிரி முகம் சுளிக்காம புள்ளைகள வச்சுக்கத்தான் இப்ப உங்க எதிர்வீடு அண்டை வீட்டுலே ஒத்துக்குவாங்களா? கூடத்துல ஒக்கார வச்சு பொரி, கடலன்னு முன்னால ஒரு கிண்ணத்துல குடுத்துட்டா நீங்கள்லாம் பேசாம திண்ணுக்கிட்டு படுத்தாம இருப்பீங்களே, உங்க பிள்ளைங்க இப்ப சாக்லேட்டும் ஆர்லிக்சும்ல கேக்குதுங்க! எங்க காலத்துல புள்ள வளக்குறது இப்ப மாதிரி கஷ்டமா ஒண்ணும் இல்ல" என்றார்கள்.
அம்மா சொன்னது உண்மைதான். நெல்லைத் தொம்பையில் போட்ட மாதிரி, மணிலாக் கொட்டையைப் போட இடமில்லாமல் விற்கிறவரை வீடு முழுதும் கொட்டிக் கிடக்கும். கடலையின் கதகதப்பின் மீது தான் வீட்டுக்குள் நடமாட முடியும்.
தெருவில் எது விற்றாலும் - மாம்பழம், எலந்தைப் பழம், பாலப் பழம், முந்திரிப் பழம், பெலாச்சுளை என்று எது வந்தாலும் அம்மா கூப்பிட்டு பிள்ளைகளுக்காக வாங்கி விடுவார்கள். பணமாகக் கொடுப்பதில்லை. பதிலாக நெல்தொம்பையின் அடிச்சொருகுக் கதவைத் திறந்து விட்டால், மடையைத் திறந்து விட்டால் தண்ணீர் சீறிப் பாய்கிற மாதிரி 'சரசர' வெனச் சரியும் நெல்லை முறத்தில் ஏந்தி பண்டமாற்றாக அதைக் கொடுத்துதான் வாங்குவார்கள்.
அம்மா பிள்ளைகளைப் பேணி வளர்த்த மாதிரி இப்போது யார் செய்கிறார்கள்?சனிக்கிழமை தோறும் எண்ணை முழுக்காட்டு; மாதத்திற்கொரு முறை விளக் கெண்ணை; வெள்ளிக்கிழமைகளில் எல்லோரையும் நெருக்கி உட்காரவைத்து
திருஷ்டி சுற்றிப் போட்டது என்று ஒவ்வொன்றாய் சிதம்பரத்தின் நினைவில் அம்மாவின் நினைவுகள் புரள்கின்றன.
அம்மா படித்தது மூன்றாம் வகுப்பு வரைதான். அந்தக் காலத்து சாத்தாணிப் பள்ளிக்கூடப் படிப்பு என்பதால் எண்ணும் எழுத்தும் அத்துபடி. திக்காமல் திணறாமல் வாசிக்கவும் எழுதவும் செய்தார்கள். வீட்டின் வரவு செலவை எல்லாம் அதற்கான கணக்கு நோட்டில் அன்றாடம் எழுதி வைப்பது அம்மாதான். அம்மாவிடம் கற்றதுதான் சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலம் முதல் இன்று வரை வரவு செலவுக் கணக்கை எழுதுகிற பழக்கம். பிள்ளைகளுக்குப் பெரியம்மா, மாமா போன்றவர்கள் பார்க்கும் போது கொடுக்கிற காசுகள், காணும் பொங்கலில் கிடைக்கும் காசு ஆகியவற்றை ஒவ்வொருவருக்கும் தனியாக சுருக்குப் பை வைத்து அதில் விவரச்சீட்டுடன் போட்டு வைப்பது அம்மாவின் பழக்கம். அப்பாவை விட ஒரு பத்து வருஷம் அதிகமாக 95 வயது வரை வாழ்ந்ததும், நினைவு தப்பிய கடைசி ஐந்து வருஷத்துக்கு முன்வரை அம்மா கண்ணாடி போடாமலே புத்தகங்கள் படித்ததும் கணக்கு எழுதியதும், ஒரு பல் கூட சொத்தை சோடை இல்லாமல் தேங்காய்ச் சில்லு போல பளிச்சென்ற வெண்மை யுடன் திடமாக இருந்ததும் இப்போது சொன்னால் நம்புவது கஷ்டம்தான்.
அப்பா பாம்புக்கடி பச்சிலையும், காலரா மருந்தும் வாங்கி பலரது உயிரைக் காப்பாற்றிய மாதிரி, அம்மா குழந்தைகளுக்கான மருந்துகளை - கோரோசனை, தஞ்சாவூர் மாத்திரை போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டு குழந்தை வைத்தியத்துக்காகத் தன்னிடம் உதவி கேட்டு வருகிறவர்களுக்கு அனுசரணையாய்க் கொடுத்து உதவியதாலும் ஊர்ப்பெண்களுக்கு அம்மாவிடம் மிகுந்த மரியாதையும் ஈடுபாடும் இருந்தது. திருமணத்துக்கு நெல் புழுக்குவதற்கு முதல் கை எடுத்துப் போட அம்மாவைத்தான் கூப்பிடுவார்கள். எல்லோர் வீட்டுத் திருமணச் சடங்குகளும் அம்மா இல்லாமல் நடக்காது. கைராசி கருதியும் நிறையப் பிள்ளைகளைப் பெற்றுப் பெருக வாழ்ந்தவர்கள் என்பதாலும், ஊரில் நல்லது கெட்டதுகளுக்கு அம்மாவின் யோசனை தான் முதலில் நாடப்படும்.
அம்மாவின் அப்பா உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தின் ஜாகிர்தாராக இருந்தவர். அம்மா சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தான் ஜமீந்தார் மகளாக்கும் என்று சொல்லிக் கொள்வார்கள். சரியான தருணங்களில் அப்பா அதை இடித்துக் காட்டுவதுண்டு. அத்தகைய சம்பவம் ஒன்று சிதம்பரத்துக்கு ஞாபகம் வந்தது.
தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அம்மா நிறைய செய்து வைத்துக் கொண்டு வந்து கேட்கிற ஏழை பாழைகளுக்கு சுணங்காமல் கொடுப்பார் கள். அப்படி வாங்கிப்போகிறவர்கள் எல்லொரும் எப்போதும் விசுவாசம் காட்டுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அப்பா கண்பார்வை போய் தெருத் திண்ணயில் அமர்ந்திருக்கையில் தெருவில் ஆள் அரவம் கேட்டால், "ஆருப்பா அங்கே போறது?" என்பார்கள். போகிறவர் நின்று என்ன வேண்டும் என்று கேட்பார்கள். ஆட்களாக இருந்தால் அப்பா இடும் சின்ன வேலைகளை முகம் சுளிக்காமல் செய்து கொடுத்து விட்டுப் போவார்கள். எல்லோரும் அப்படி இல்லை. ஒரு தடவை ஒரு இளவட்டப் பையன் - அப்பாவிடம் மருந்தும் அம்மாவிடம் பலகாரமும் பல தடவை பெற்றுச் செல்கிறவன் அப்பா கூப்பிட்டபோது, 'தோ போய்ட்டு வரேங்க' என்று நழுவினவன் திரும்ப வரவில்லை. அடுத்த முறை அவன் தென்பட்டபோது, அம்மா "அவ்வளவு கணக்காயிப் போச்சா? கண்ணு புரியாமத்தான ஒன் கிட்டச் சொன்னாரு? 'வரேன்'னுட்டு போனியே வந்தியா? அடுத்தாப்பல பாம்பு பச்சில, தீவாள்¢ பொங்கலுன் னுட்டு வருவீல்ல அப்ப சொல்றேன்" என்று கடிந்தார்கள். அப்பாவுக்கு அப்படிச் சொல்லிக்காட்டுவது பிடிப்பதில்லை. "சே! அவந்தான் அல்பம்னா நீ அதவிட அல்பமா சொல்லிக்காட்டறதா? அப்றம் என்ன 'நா ஜமீந்தார் மக'ன்னு பீத்திக்கறது?" என்று இடித்தார்கள்.
"என்ன அப்பிடியே கதவையே வெறிச்சுப் பாத்தபடியே இருக்கீங்க?" என்று மருது அவரை நினைவுகளிலிருந்து மீட்டான்.
"அந்தக் கதவைப் பாத்ததும் அதுக்குப் பின்னாலே அந்தக் காலத்துலே சிறு பிள்ளையா பாத்ததும், அப்பா அம்மாவைப் பத்திய நெனவுகளூம் ஞாபகம் வந்துடுச்சு!" என்று திரும்பினார்.
பிறகு எதிரே பார்த்து, "ஆமா, வீட்டுக்கு எதிரே அந்த சந்துக்குப் பக்கத்திலே நிக்குமே விளக்குக் கல்கம்பம் எங்கே அதக் காணுமே......" என்றார்.
"அதோ எதிர்வீட்டு வாசப்படிக்கிட்டே தரையிலே பொதஞ்சிருக்கு பாருங்க" என்றான் மருது.
பெரியப்பாவின் புகழ் பாடும் அந்தக் கல்கம்பத்தை மனதுக்குள் நிமிர்த்தி பழைய இடத்தில் வைத்துப் பார்த்தார் சிதம்பரம்.

கால நதிக்கரையில் - 26
- வே.சபாநாயகம்
தெருவின் நடுப்பகுதிக்கு வந்ததும் சிதம்பரம் வாழ்ந்த வீட்டின் முன்னே சற்று நின்றார்கள். குறட்டில் அப்பா எப்போதும் மாலையில் உட்காரும் சிமிண்ட் திண்ணை அப்படியே இருந்தது. வீடு பூட்டி இருந்தது.
"வெளியிலே ஒண்ணும் மாற்றம் செய்யில. உள்ள மட்டும் கொஞ்சம் மராமத்து செஞ்சிருக்காங்க. வீட்ட நல்லா வச்சிருக்காங்க" என்றான் மருது. குறடேறி தெருத் திண்ணை மீது அமர்ந்தார்கள். திண்ணை மீது அமர்ந்ததும் சிதம்பரத்துக்கு அப்பா எதிர்த் திண்ணையில் அமர்ந்து தன்னிடம் பேசியதெல்லாம் நினவுக்கு வந்தது.
வேலைக்குப் போன பிறகு மாதா மாதம் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க ஊருக்கு வருவார். காலையில் சாப்பிட்டபின் பெரிய திண்ணையில் அமர்ந்து சிதம்பரம் ஏதாவது படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருக்கையில் எதிர்த் திண்ணயில் உட்கார்ந்திருக்கும் அப்பா அரவம் கேட்டு "ஆரு சிதம்பரமா?" என்பார்கள்.
அப்போது அப்பாவுக்குக் கண்பார்வை முழுதுமாய்ப் போய்விட்டிருந்த நேரம். பத்து வருஷத்திற்கு முன்னால் மாமாவின் காரில் ஒருமுறை போய்க் கொண்டிருந்த போது அந்தக் கார் விபத்துக்கு உள்ளானது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அப்பாவின் முகம் முன்னால் மோதியதில் கண்ணுக்கருகில் மூக்குத் தண்டில் அடிபட்டு பார்வை நரம்பு பாதிக்கப் பட்டது. உடனே வைத்தியம் பார்த்தும், கொஞ்சம் கொஞ்சமாகப் பத்து ஆண்டுகளில் பார்வை குறைந்து கொண்டே வந்து அப்போது முற்ற்¢லுமாகப் போய்விட்டிருந்தது. அப்பாவின் பெரிய பூஜையையும், தெய்வபக்தியையும், அவர்களது தர்மசிந்தையையும், பாம்புக்கடிக்குப் பச்சிலை கொடுத்துப் பலரது உயிரைக் காப்பாற்றிதையும் அறிந்தவர்கள் அப்பாவிடம், "இவ்வளவு புண்ணியம் செஞ்சீங்களே உங்குளுக்கு ஏன் கடவுள் பார்வையைப் பறிச்சாரு?" என்று மனம் உருகக் கேட்கும்போது அப்பா சொல்வார்கள்: "இந்த ஜன்மத்துலே எனக்குத் தெரிஞ்சு எந்தப் பாவமும் நா பண்ணல. இது ஏதோ பூர்வஜென்ம பாவத்தின் பலன்".
புலனுணர்வால் சிதம்பரம்தான் என்று அறிந்துதான் கேட்பார்கள். "ஆமாம்ப்பா" என்றதும், கண்களை மூடியபடியே, "இதப்பார் சிதம்பரம், இனிமேயெல்லாம் எங்காலத் துக்குக்கப்புறம் நீங்க யாரும் இந்த ஊர்ல விவசாயம் பண்ணிடலாம்னு நெனைக்காதீங்க. காலம் மாறிப் போச்சு! அதிகாரமும் அந்தஸ்தும் இனிமே எடுபடாது. தெரியாமியா நா உங்கள எல்லாம் படிக்க வச்சேன்...." என்று நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார்கள். சிதம்பரத்துக்கு அப்போது பொறுமையற்ற, துடியான வயது. தான் படிப்பதற்கு அது இடைஞ்சலாக இருப்பது போலத் தோன்றி, 'விடுங்கப்பா! எத்தினி தடவை இதியே சொல்லுவிங்க?' என்று மனதுக்குள் அலுத்துக் கொள்வார். பின்னாட்களில், அப்பா இறந்த பிறகு பல தடவை அந்த தனது அடாத செயலை, குரூரமான முணுமுணுப்பை எண்ணி மனம் நொந்திருக்கிறார். அப்பாவுக்குக் கண் பார்வை தெரிந்திருந்தால் தான் படித்துக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். படிப்ப தற்கு இடைஞ்சலாகப் பேசி இருக்க மாட்டார்கள். கண் பார்வையற்றவர்களுக்குப் பிறரிடம் பேசுவதில் நிம்மதி கிட்டும் என்று அறியாமல் எவ்வளவு குரூரமாய் உதாசீனம் செய்தோம் என்று இன்றும் இப்போதும் மனம் அழுகிறது. இனி அப்படிச் சொல்ல அப்பா இல்லை. அதோடு 'அப்பாவுக்கு நாம் என்ன செய்து விட்டோம்? பத்திரிகை படிப்பதில் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். கண்பார்வை போன பிறகு ரேடியோ ஒன்று தான் அவர்களுக்குத் தகவல் சாதனம். எப்போதாவது ஊருக்கு வருகிறபோது அப்பாவுக்குப் பேப்பரையாவது படித்துச் சொன்னோமா?' என்ற சுய கழிவிரக்கம் மேலிட சிதம்பரம் அப்பாவை நினைத்து உருகினார்.
அதோ அந்தக் குறட்டின் திண்ணை மீது அமர்ந்துதான் இரவில் சாப்பிட்ட பிறகு சிதம்பரத்துக்கும், இந்த மருதுவுக்கும், எதிர் வீட்டு ஆறுமுகத்துக்கும் அப்பாஆங்கில பாலபாடம் கற்றுத் தருவார்கள். அந்தக் காலத்து 'ஹரிஹர அய்யர் பிரை மர்' என்ற பிரபல பாலபாட நூலை வாங்கி வைத்துக் கொண்டு, அண்ணன் காலத்திலிருந்து தம்பி வரை அலுக்காமல் பாடம் சொன்னார்கள். இப்பொழுது அப்படிப் பட்ட ஆரம்பப் பாட ஆங்கிலப் புத்தகத்தையும் காணோம், அப்பா மாதிரி பொறுமை யாய்ப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பெற்றோரையும் காணோம்.
அந்தத் திண்ணைமீது அமர்ந்துதான் மாலை வேலைகளில் அப்பா அடுத்த வீட்டு ரத்தினப் படையாச்சிக்கு தனக்கு வரும் தினமணி பேப்பரைப் படித்துக் காட்டி உலக நடப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வடக்குத் தெருவில் தான் படையாச்சிகள் குடி இருந்தார்கள். இந்தத் தெருவில் இரண்டு குடும்பங்கள் - ரத்தினப் படையாச்சியும் அவரது அண்ணனும் அடுத்தடுத்த வீடுகளில் இருந்தார்கள். இவர்கள் மற்றவர் களைப் போல இல்லாமல் கொஞ்சம் வசதியோடும் நாகரீகமாகவும் தெருப் பிள்ளைமார்கள் போல பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.
ரத்தினப் படையாச்சி அப்பாவுடன் சிறுவயது முதலே பழகி வந்ததால் அப்பாவைப்போல் ஆசாரமாகவும், திருத்தமாகவும் இருப்பார். அப்பா எப்போதும் நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் இருப்பது போல அவரும் தம் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பளிச்சென்ற பாதம் வைத்த நாமத்துடனும் இருப்பார். உடையும் எப்போதும் சுத்தமாக இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டியும், தோளில் வெள்ளைத் துண்டு மாகக் காணப்படுவார். மாமிசம் சாப்பிடுவதில்லை. எல்லா வகையிலும் அப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வந்தவர். அப்பாவை அண்ணன் என்றே அழைப்பார். அவரªவு அப்பாவுடன் நெருக்கமாகவும் எதிரே அமர்ந்தும், வேறு யாரும் பேசுவதில்லை. அவர்தான் அப்பாவின் சிந்தனைப் பகிர்தலுக்கு உகந்த சகா. அப்பா அவருக்குப் பேப்பர் செய்திகள் மட்டுமல்லாமல் பெரிய புராணம், திருவிளையாடல் புராணக்கதைகளை எல்லாம் சொல்லுவார்கள். அவர்தான் அப்பாவிடம், 'ஏன் எல்லாப் பிள்ளையும் படிக்கப் போட்டீங்க? உங்குளுக்குப் பின்னாலே நெலத்தை பார்க்க யாரும் வேணாமா? ஏன் கடவுள் உங்களுக்கு இந்தப் பார்வைக் கஷ்டத்தைக் கொடுத்தான்?' என்றெல்லாம் கேட்பவர். பிள்ளைகள் எல்லாம் படித்து வேலைக்குப் போன பிறகு அவர்தான் முதுமையில், அப்பா காலமாகிறவரை பேச்சுத் துணைக்கு உடனிருந்தவர்.
அந்தத் திண்ணை மீதிருந்து தான் அப்பா பாம்பு கடித்து எமன் பிடிக்குள் போக இருந்த பலரது உயிரை மீட்டார்கள். ஊரில் காலரா பரவியபோது தம் சொந்தச் செலவில் காலரா மருந்து பாட்டில்களை வரவழைத்துத் தானே சர்க்கரை அல்லது தேனில் கலந்து கொடுத்துப் பலரை மரணவாயிலில் இருந்து மீட்டிருக்கிறார்கள். டிஞ்சர் அயோடினும், மின்சார ரசமும் வாங்கி வைத்துக் கொண்டு காயம் பட்டவர்களூக்கும், வயிற்றுக் கோளறால் அவதிப் பட்டவர்களூக்கும் கொடுத்து உதவி இருக்கிறார்கள். இன்னும்கூட அந்தக் காலரா மருந்தின் வாசம் சிதம்பரத்துக்கு உணர்வில் நிற்கிறது.
அப்பாவின் பாம்புக்கடி வைத்தியம் அப்போது வெகு பிரபலம். தூரத்துக் காட்டுப் பகுதிலிருந்து தன் பண்ணை ஆட்களை அனுப்பி சக்தி வாய்ந்த அந்த விஷக் கடி பச்சிலையை வேரோடு பிடுங்கி வரச் செய்து காயவைத்துப் பொடி பண்ணி வைத்துக் கொண்டு பாம்புக் கடிக்கும் விஷக் கடியால் உடல் முழுதும் தினவும் அரிப்புமாய் தூக்கமின்றித் துன்பப் பட்டவர்களுக்கும் பரிவோடு தந்து அவர்க¨ளைக் குணப்படுத்தினார்கள். எத்தனையோ பேர் அந்த பச்சிலையை அடயாளம் கண்டு பிடுங்கி வந்து அப்பா மாதிரியே கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அப்பாவின் கைராசியும், பொறுமையாய் நடு இரவிலும் முகம் கோணாது எழுந்து பச்சிலைப் பொடியை குழைத்து மணிக்கொரு தடவை மீண்டும் மீண்டும் கொடுத்து மயக்க முற்றவர் கண்விழிக்கும் வரை மணிக்கணக்கில் தூங்காமல் விழித்திருந்து செய்த சேவையும் அவர்களிடம் இல்லை. அதனால் அப்பாவிடம் அண்டை அயல் ஊரிலும் ஒரு மரியாதையும் பக்தியும் கூட இருந்தது.
இந்தக் குறட்டில், வாய் நுரை தள்ள நினைவிழந்து கயிற்றுக் கட்டிலில் கிடத்தி தூக்கி வரப் பட்டவர்க¨ள் எத்தனை பேர்களைக் காப்பாற்றினார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை. நேரம் காலம் இல்லை; ஜாதி பேதம் பார்த்ததில்லை. உயிர்காக்கும் இந்த சேவையை அப்பா ஒரு தவமாகவே செய்தார்கள்.அதற்காக ஒரு பைசாவும் யாரிடமும் பெற்றதில்லை. எந்தப் பிரதிபலனையும் எதிர் பார்த்ததில்லை. அப்பாவால் மறு பிறவி எடுத்தவர்கள் விசுவாசத்தோடு அப்பாவையும் அவர் வம்சத்தையும் வாழ்த்திப் போற்றியதுதான் இதனால் கிட்டிய பேறாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்த்தால் எப்படியாவது அந்தக் கடனைத் தீர்க்க அவர்கள் துடித்தார்கள்.
அப்படி ஒரு கடன் தீர்க்கும் வாய்ப்பு ஒரு ஏழை விவசாயிக்குக் கிடைத்தது. விழுதுடையான் என்ற பக்கத்துக் கிராமத்து விவசாயி அவன். வயலில் அண்டை வெட்டும்போது நல்ல பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டை போல ஆகிவிட்ட வனை, கட்டைவண்டியில் கிடத்தி, ஐந்து மைல் போலப் பயணித்து அப்பாவிடம் இருட்டும் வேளைக்குக் கொண்டு வந்தார்கள். அப்பா நான்கு மணி நேரத்துக்கும் மேலாக அருகிருந்து மணிக்கொரு தடவை பச்சிலைப் பொடியைக் கரைத்துப் புகட்டச் செய்து, பாதிக்கப் பட்டவனுக்குத் துக்கம் வந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளச் செய்தார்கள். நள்ளிரவு நேரத்துக்குத்தான் அவன் எழுந்து உட்கார்ந்தான். மாண்டவனாகக் கருதப் பட்டவன் மீண்டெழுந்து கண்களில் நீர் பெருக அப்பாவை விழுந்து வணங்கி, தானே வண்டிஏறிச் சென்றதை ஊரே அதிசயமாய்ப் பார்த்தது. அந்த விவாசாயி அப்பபாவுக்கு எப்படித் தன் நன்ற்¢க் கடனைத் தீர்ப்பது என்று காத்திருந்திருக்கிறான்.
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் லால்குடியில் வாழ்க்கைப் பட்டிருந்த சிதம்பரத்தின் அக்கா ஒரு விடுமுறையின் போது தன் மூன்று சிறு குழந்தைகளுடன் பிறந்த ஊருக்கு வந்தார். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் பாலம் கட்டியிருக்க வில்லை. அதனால் திருச்சியிலிருந்து லால்குடி வழியே விருத்தாசலம் நோக்கி வரும் பஸ் மூன்று மைலுக்கு அப்பால் ஒரு கிராமத்துடன் நின்று விடும். அக்கா வழக்கமாய் அப்பாவுக்கு, பஸ் நிற்கும் ஊருக்கு வண்டி அனுப்பச் சொல்லி முன்னெச்சரிகையாய்க் கடிதம் எழுதிவிட்டே வருவது வழக்கம். இம்முறை கடிதம் போட்டும் உரியநேரத்தில் அப்பாவுக்குக் கிடைக்காததால் வண்டி வரவில்லை. மாலை இருட்டும் வேளையில் குழந்தைகளுடன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அக்காவுக்கு வண்டியைக் காணாமல் பகீரென்று ஆகி விட்டது. அது அத்துவானக் காடு. ஊர் என்கிற பெயரில் ஓரிரு குடிசைகளே அங்கு இருந்தன. அங்கு இரவு தங்கி மறுநாள் போக எந்த நாதியும் இல்லை. திகைத்துப் போன அக்காவுக்கு அழுகை வந்து விட்டது.
அப்போது தெய்வமே அனுப்பியதுபோல ஒரு கட்டை வண்டி அந்த வழியே வந்தது. வண்டியோட்டி குழந்தைகளுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு பெண் அநாதரவாய் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தி இறங்கி அருகில் வந்தான். ''ஆரும்மா அது? தனியா அத்துவானக் காட்டுலே இருட்டு நேரத்துக்கு வந்து நிக்கிறியே?" என்று அனுதாபத்துடன் கேட்டான். அக்கா ஆதரவான வார்த்தைகளால் நெகிழ்ந்து அழுதபடியே, வண்டி அனுப்பச் சொல்லி அப்பாவுக்கு எழுதிவிட்டே வந்தும் எதனாலோ இப்படி நிற்கும்படி ஆகி விட்டது என்று சொல்ல, அவன் மேலும் எந்த ஊர், யார் வீடு என்றெல்லாம் கேட்டிருக்கிறான். அக்கா ஊரையும் அப்பாவின் பெயரையும் சொன்னதைக் கேட்டதும் அவன், ''ஆ! எங்க சாமியின் பொண்ணா? ஆண்டவன் சரியான நேத்துலே எங் கடனைத் தீக்க அனுப்பிச்ச மாதிரி இருக்கு" என்று உருகி இருக்கிறான். பிறகு தான்தான் அப்பாவால் உயிர் மீட்கப்பட்ட விழுதுடையான் விவசாயி என்று சொல்லி, ''கவலப் படாதம்மா! அப்பா பண்ணிய புண்ணியம் தான் என்னக் கொண்டாந்து விட்டுருக்கு. வண்டியிலே ஏறு. நா கொண்டு போயி சேக்கிறேன்" என்று சொன்னான். சொன்ன படியே வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான்.
அப்பா இருந்தவரை இந்தப் பிராந்தியமே பாம்புக்கடி பயமே இல்லாமல் நிம்மதியுடன் இருந்தது. இன்னும் சொல்வதானால் அப்பா இருக்கும் தைரியத்தில் ஒரே பாம்பால் மூன்று முறை கடிபட்டு அப்பாவிடம் ஓடி வந்து பச்சிலை விழுங்கிஅந்தப் பாம்பை விடாமல் துரத்தி மண் வெட்டியால் வெட்டிக் கொன்று வீரசாகசம் புரிந்தவனும் அடுத்த ஊரில் இருந்தான்.
தெருக்குறடும் திண்ணையும் நினைவூட்டிய அப்பாவின் பெருமை மிக்க அந்தக் நிகழ்ச்சிகளை, சிதம்பரம் மருதுவுக்குச் சொல்லும் சாக்கில் தனக்குள்ளும் ஓடவிட்டு லயித்து நின்றார்.

கால நதிக்கரையில் - 25
நாராயணசாமி பிள்ளையின் வீடு சிதம்பரம் வீட்டுக்கு எதிர்ச் சாரியில் இரண்டு வீடு தள்ளி இருந்தது. அவரது சகோதரர்கள் இருவருடன் பாகப்பிரிவினை நடந்த போது பூர்வீக கல்வீடு அவரது அண்ணனுக்கும் தம்பிக்கும் சமபாதியாக ஒதுக்கப்பட்டு, இவருக்கு தெரு முனையில் மணியப் பிள்ளை வீட்டுக்கு எதிரில் இருந்த காலிமனை ஒதுக்கப்பட்டது. அதில் அவர் வீடு கட்டிக் கொண்டார்.
இப்போது அவர் வாழ்ந்த வீடு கூரை இல்லாமல் சுவர்கள் மட்டும் அரை குறையாய் இடிந்து நின்றன.
"என்னப்பா ஆச்சு இந்த வீட்டுக்கு?" என்று கேட்டார் சிதம்பரம்.
"அவுரு இருக்கும்போதே வித்துட்டாரே! வாங்குனவன் ரொம்ப வருஷமா இப்பிடிப் போட்டு வச்சிருக்கான். அவரு பசங்க மூணு பேரும் தெக்குத் தெருவுலே அவரோட அத்தை எழுதிக் குடுத்த மனையிலே கூர வீடு கட்டிக்கிட்டு அம்மாவோட இருக்காங்க" என்றான் மருது.
நாராயணசாமி பிள்ளை சிறு பிள்ளையிலிருந்தே துடுக்கான பேச்சும் குறும்புத் தனங்களும் மிகுந்தவர். எதிலும் தலையிட்டு கேள்வி கேட்கும் எதிர் சிந்தனைப் போக்கு மிக்கவர். எந்த ஊர்வம்பு தும்புகளிலும் முன்னிருப்பவர். வயது, சாதி, அந்தஸ்து, ஆண் - பெண் என்று எந்த பேதமும் இல்லாமல் யாரையும், எங்கும் கேலி பேசுவதும், வம்புக்கு இழுப்பதும் அவருக்குத் தீராத விளையாட்டு. கள்ளக் காதலர் களுக்கு அவர் சிம்மசொப்பனம். இளம் காதலர்கள் மட்டுமின்றி, குடியும் குடித்தனமுமாய் இருப்பவர்களின் அந்தரங்கங்களும் அவருக்கு அத்துபடி.
ஊரில் முதலில் தென்படுகிற அப்பு வீட்டு அகன்ற திரை போன்ற பெருஞ்சுவரில் எழுதப்படும் அக்கப்போர்களில் அதிகமும் அவரது கோஷ்டியின் கைங்கரியம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான். கோவில் நிர்வாகி, பெருமாள் கோவில் பட்டர் மற்றும் தர்மகர்த்தாக்களின் ஊழலும் அவரது கண்டனத்துக்குத் தப்ப வில்லை. அவரை யாரும் கண்டிக்கவோ புத்தி சொல்லவோ முடியாமல் 'கைம்பெண் வளர்த்த பிள்ளை அப்படித்தான் இருக்கும்' என்று அவர் அம்மாவுக்கு வசவு வாங்கித் தந்து கொண்டிருந்தார். திருமணம் ஆகி, பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவரது விளையாட்டுத்தனமும் மணியப்பிள்ளை போன்ற அப்பாவிகளை வம்புக்கு இழுப்பதும் தொடரவே செய்தன.
'கண்ணாடிப் பிள்ளை' என்பது போல காரணப் பெயராக இல்லாமல் என்ன காரணத்தாலோ 'காத்துப் பிள்ளை' என்று அவருக்கு ஒரு மாற்றுப் பெயரும் ஊரில் வழங்கி வந்தது. சுப்பிரமணிய பிள்ளைக்கு மணியப் பிள்ளை என்று பெயர் வழங்கியது மாதிரி கூட புரிந்து கொள்ள முடியாத பெயர்.
உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல ஊருக்குத் தற்காலிகமாய்க் குடி வந்தவர்களையும், விருந்தாளியாக வந்திருப்பவர்களையும் கூட அவர் விட்டு வைப்பதில்லை. அப்படி அவரிடம் சிக்கி நிம்மதி இழந்தவர்களில் ஒருவன் கொத்தன் ராஜவேலு.
அவன் பத்து மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு உள்ளூரில் நேர்ந்த ஒரு சிக்கலால் அப்பா அம்மாவுடன் தற்காலிகமாக இந்த ஊரைப் புகலிடமாக்கிக் கொள்ளக் குடி வந்தவன்.
ஊரில் யாருக்கும் அவன் வந்திருப்பது பற்றியோ அதற்கான காரணம் பற்றியோ அக்கரையோ ஆர்வமோ எழவில்லை. ஆனால் காத்துப் பிள்ளையால் அப்படி இருந்து விட முடியவில்லை. ஊர்த் தலைவரோ, மணியமோ கேட்க வேண்டிய விசாரிப்புகளை அவர் மேற்கொண்டார். சொந்த ஊரில் இருக்கப் பயந்து தலைமறைவாய் இருக்க வந்தவன் உண்மையான காரணத்தைச் சொல்லுவானோ? பிழைப்புத் தேடி வந்திருப்ப தாக அவன் சொன்னதை அவர் நம்பவில்லை. சொல்லும்போது ஏற்பட்ட அவனது முகமாற்றமும் முன்னுக்குப் பின் முரணான பேச்சும் அவரைச் சந்தேகிக்க வைத்தன. அவனது உண்மையான ஊரைக் கூட அவரால் அவனிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. அவரது வம்புப்பேச்சுக்குப் பயந்து அவன் அவர் கண்களில் படாமல் நடமாடினான். அது அவருக்கு ஒரு கௌரவப் பிரச்சினை போல ஆனது.
சிதம்பரம் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கோடை விடுமுறையில் வந்திருந்தபோது தான் ராஜவேலு என்கிற அவனைப் பற்றிக் கேள்விப் பட்டார். காத்துப் பிள்ளைதான் அவரிடம் அவனைப் பற்றிய சந்தேகத்தைச் சொல்லி, "நீயே கேளு சிதம்பரம். என்ன மெரட்டினாலும் அவங்கிட்ட இருந்து உண்மைய வரவழைக்க முடியல" என்றார்.
சிதம்பரத்துக்கு அது நியாயமற்ற தலையீடாகப் பட்டது. ஆனாலும், காத்துப் பிள்ளையின் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் காலை ஆற்றுக்குக் குளிக்கப் போகையில் ராஜவேலுவை அழைத்துப்போய் தனிமையில் பரிவுடன் விசாரித்தார். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு அவன், சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்பை உணர்ந்தவனாகத் தன் கதையைச் சொன்னான்.
அவனது கிராமத்தில் நடந்து விட்ட ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக அவன் சிக்கலில் இருந்தான். அவனும் இன்னும் மூன்று விடலைப் பையன்களுமாய் கூட்டாக திருமணமாகாத ஒரு இளம் பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணுடைய தகப்பன் மிகவும் மானஸ்தன். முன்கோபமும் முரட்டுத்தனமும் இயல்பாகவே அமைந்த இனத்தின் முக்கியப் புள்ளி. தன் பெண்ணின் தகாத உறவு அவனுக்கு வெகு நாட்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் அதனால் கர்ப்பமுற்றது தெரிந்தபோது அவனுக்கு ஆவேசமாகி விட்டது. தன் மானத் தையும் குடும்ப கௌரவத்தையும் குலைத்த மகளை, கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் பாட்டி வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி பக்கத்து நகரத்தை ஒட்டி இருந்த ஒரு அடர்ந்த காட்டில் வீச்சரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு நேராகப் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்து விட்டான்.
போலீஸ் அந்த ஊருக்குப் போய் விசாரித்ததில் ராஜவேலுவும் அவனது கூட்டாளிகளும் இதில் சம்பந்தப் பட்டிருப்பது அறிந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் லாக்கப்பில் போட்டு விசாரித்தார்கள். அடி, உதை என்று எல்லாவித போலீஸ் மரியாதைகளுக்குப் பிறகு பையன்கள் அந்தப் பெண்ணோடு தங்களுக்கு இருந்த கள்ள உறவை ஒப்புக் கொண்டார்கள். கொலை செய்தது அவர்கள் இல்லை என்பதாலும் கொலை செய்த தகப்பனே குற்றத்தை ஒத்துக் கொண்டதாலும் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருந்தார்கள். ஆனால் உள்ளூரில் அதற்கு மேலும் இருக்கப் பயந்து கொண்டு நாலு பையன்களும் திசைக் கொருவராகப் பக்கத்து ஊர்களில் புகலிடம் தேடிப்போனபோது ராஜவேலு இந்த ஊருக்கு வந்து விட்டிருந்தான்.
ராஜவேலு தன் சோகமான கதையைச் சொல்லிவிட்டு சிதம்பரத்திடம் மேற்கொண்டு என்ன ஆகுமோ என்ற பயத்தையும், காத்துப் பிள்ளையிடம் சொல்லி மேற்கொண்டு அவனது கதையைத் துருவித் தொந்தரவு தராதிருக்கச் சொல்லும் படியும் கெஞ்சினான். பயத்தில் அவன் கிலிபிடித்தவன் போல் மிரண்டிருப்பது தெரிந்தது. அவனை நிம்மதியாய் வந்த இடத்திலும் வாழவிடாமல் காத்துப் பிள்ளை செய்வது அவனுக்குப் 'புலியிடமிருந்து தப்பி முதலை வாய்க்குள் விழுந்தமாதிரி' ஆகி விட்டது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது.
மறுநாள் காத்துப் பிள்ளையிடம் பக்குவமாய் ராஜவேலு விஷயத்தைச் சொல்ல இருந்தபோது அவரே சிதம்பரத்தைத் தேடி வந்தார். அவரது கையில் கைக்கு அடக்கமான ஒரு சின்னப் புத்தகம் இருந்தது. பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்திய பூரிப்பு அவரது முகத்தில் தெரிந்தது.
"இதப் பாத்தியா சிதம்பரம்! இந்தப் பய சொல்லாட்டி நா கண்டுபிடிக்க மாட்டனா? டவுன் சந்தையிலே இவங் கதைய டேப் அடிச்சுப் பாடுறான். இதுதான் அந்தக் கொலைச் சிந்து!" என்று அந்தப் பிரசுரத்தை சிதம்பரத்திடம் நீட்டினார். அதில் ராஜவேல் சொன்ன கதை முழுதும் பாட்டாக எழுதப் பட்டிருந்தது.
அப்போதெல்லாம் பரபரப்பான கொலை கொள்ளைச் செய்திகள் சூடு தணியு முன்பாக, இதுபோல சிந்து பாடி சிறு பிரசுரமாக அச்சிட்டு ஒர் அணா, ரெண்டணா விலையில் சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் டேப் அடித்துப் பாடி விற்கப்படும்.
"ராஜவேலு எங்கிட்ட எல்லாத்தியும் சொல்லிட்டான். பாவம்! அவன விட்டு ருங்க. நீங்க முரட்டுத்தனமா கேட்டதுலே பயந்துட்டான்" என்றார் சிதம்பரம்.
"அதெப்படி விட்டுடுறது? எங்கிட்டியே மறைச்சா உட்றுவனா? இப்ப அவங்கிட்ட இதக் காட்டி ஒரு உலுக்கு உலுக்கிட்டுதான் வரேன்" என்றார் வெற்றிப் பெருமிதத்துடன். அதோடு "ஜெயில்ல இருக்குற அப்பன்காரன் ஜாமீன்ல வெளீல வந்து உங்க நாலு பேரையு தீர்த்துக் கட்டப் போகிறானாம்" னும் செல்லி வச்சேன்" என்று கெக்கலி கொட்டினார். பாவம், ராஜவேல் அதைக் கேட்டு குற்றுயிரும் கொலை உயிருமாய் ஆகி இருப்பான் என்று மனம் கசிந்தார் சிதம்பரம்.
"போவுது இத்தோட விட்டுடுங்க! ஓடுறவன விரட்டுறது வீரமில்லே!" என்று காத்துப் பிள்ளையைத் தடுத்து ராஜவேலுவை ஆற்றுப் படுத்தியது நினவுக்கு வந்தது. அதை நினைவூட்டி இப்போது மருதுவிடம் சொன்ன போது அவன் சொன்னான்: "ஆயிரம் அடாவடித்தனம் இருந்தாலும் அவுரு தன்னோடத் தம்பியை உங்கள மாதிரியே காலேஜுல படிக்க வைக்கணும்னு ஆசப்பட்டு நீங்க படிச்ச காலேஜுலியே படிக்க வச்சாரே அதுக்காகப் பாராட்டணும்"
"உண்மைதான். ஹைஸ்கூல் வரைக்கும் கடன் வாங்கியோ எப்பிடியோ படிக்க வச்சார். அப்புறமா தன்னாலே முடியாமெ சொத்து வருதுண்ணு காலேஜுக்குப் போறதுக்கு முன்னாலே ஒறவுலே கல்யாணமும் பண்ணி வச்சுட்டாரு. நாங்கள்லாம் ஹாஸ்டல்லே தங்கிப் படிச்சப்போ அவரோட தம்பி டவுன்ல ஒரு சின்னப் போர்ஷன்ல வாடகைக்கி புது மனைவியோட தங்கிக்கிட்டு படிச்சார். அதுவும் இண்டருக்கு மேலே முடியல. அப்றம் என்ன ஆச்சுன்னு தெரியல!" என்றார் சிதம்பரம்.
"அதுக்கு மேல காத்துப் பிள்ளைக்கு சக்தி இல்லே. அவுரு தம்பி டவுன்ல டைப் அடிக்கக் கத்துத் தர ஒரு எடத்தை வாடகைக்குப் பிடிச்சி, நாலஞ்சு மிஷின வாங்கிப் போட்டு ஆரம்பிச்சாரு. அதுல தான் வந்துது வினையே!" என்று சற்றே நிறுத்தினான் மருது.
அப்பொழுது சிதம்பரம் வேலைக்காக வெகு தொலைவுக்குப் போய்விட்டதால் அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க வில்லை.
"ஏன், என்ன ஆச்சு?" என்றார் ஆர்வமாக.
"டைப் சொல்லித் தர ஒரு பெண்ணை உதவிக்கு வச்சார். அவ அவரை மயக்கி ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதோட விடுல. அவர் பங்குக்கு இருந்த வீடு நெலம் எல்லாத்தையும் வித்துக் காசாக்கி அவரையும் வற்புறுத்தி அழச்சிக்கிட்டு தன்னோட சொந்த ஊரான கோயம்புத்துருக்குக் கொண்டு போய்ட்டா. ஊரை எல்லாம் நையாண்டி பண்ணிய காத்துப் பிள்ளைக்கு இப்ப ஊரே தன்னைப் பாத்து நையாண்டி பண்ற மாதிரி ஆயிடுச்சேன்னு மனசு ஒடஞ்சு போய்ட்டுது. தம்பிய வளத்து ஆளாக்கப் பாடு பட்டவருக்குத் தன் பிள்ளைகள அப்படிச் செய்ய முடியாம போயிடுச்சி. அவுரு தம்பியும் சீக்கிரமே ரெண்டாவது பொண்டாட்டியோட கொடுமத் தாங்காம பூச்சி மருந்து குடிச்சி செத்துப் போய்ட்டார்னு சேதி வந்துது. காத்துப்பிள்ளை அப்ப படுத்தவர்தான். அப்றம் எழுந்திருக்கவே இல்லே. மொதல் சம்சாரமும் கொழந்தையும் பொறந்த ஊட்டோடப் போய்ட்டாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படிச் செதறிப் போச்சு" என்று இரக்கத்தோடு சொன்னான் மருது.
சிதம்பரத்துக்குக் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. "வா, போகலாம்" என்றபடி நடந்தார்.

கால நதிக்கரையில் - 24
கால நதிக்கரையில் - 24
- வே.சபாநாயகம்
கீழ மந்தையிலிருந்து கிளம்பி நடுத்தெருவை நோக்கி நடந்தார்கள். சிதம்பரம் வாழ்ந்த வீடு அந்தத் தெருவில்தான் நடுப் பகுதியில் இருந்தது. தெருமுனையில் இருந்த முதல் வீட்டைப் பார்த்ததும் சிதம்பரத்துக்கு அந்த வீட்டின் மணியப் பிள்ளை ஞாபகத்துக்கு வந்தது.
"மணியப் பிள்ளை இருக்காரா மருது?" என்று கேட்டார்.
"இந்தத் தெருவின் அரவமே அவர் போனதுக்கப்றம் போச்சு!" என்றான் மருது.
"என்னப்பா சொல்றே? மணியப் பிள்ளை இல்லியா?" என்று சற்றே பதற்றத்து டன் கேட்டார். "வயதுகூட அதிகம் இருக்காதே! என்னைவிட ரெண்டு மூணு வருஷம்தானே பெரியவர்?"
"சாகிறதுக்கு வயசு ஒரு காரணமா? இது அவுரு தானே தேடிக்கிட்ட முடிவு. மணியப் பிள்ளை தற்கொல பண்ணிக்கிட்டாரு!" என்றான் மருது சாவதானமாக.
"அய்யய்ய! எப்பிடிப்பா - ஏன்?" என்று சிதம்பரம் பதறினார்.
"எதோ வீட்லே தகராறு! வருமானமுமில்லே. வறுமைதான் முக்கியமான காரண மாயிருக்கணும். அவருதான் ரோஷக்கார மனுஷர்னு உங்குளுக்குத் தெரியுமே! 'குடும்பத்த வச்சிக் காப்பாத்த வக்கில்லாத ஆளு' ன்னு அவரோட புள்ளைகளும் பொண்டாட்டியும் நினைச்சது அவருக்குத் தாங்க முடியாமப் போச்சுன்னு பேசிக்கிட்டாங்க. "
"அப்டியெல்லாம் மனசு தளர்ரவரில்லியே! மாட்டுத் தரகெல்லாம் பண்ணிக்கிட்டிருந்தாரே!"
"அதுலே ஒண்ணும் பெருசா வரல்லே. குடும்பமும் பெரிசாயிடுச்சு. ஒருத்தர் கிட்ட வேலைக்குப் போறதுக்கும் வரட்டுக் கௌரவம்.... விதி முடிஞ்சுட்டா எதாவது ஒரு எமப்பழி" என்றான் மருது வேதாந்தமாக.
சிதம்பரத்துக்கு மனது கனத்தது. எவ்வளவு வெகுளியான நல்ல மனிதர்! தான் அதிகம் படிக்காததால் சிதம்பரம் படித்திருப்பது பற்றி அவரிடம் ஒரு மரியாதை. விடு முறையில் அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தால் போதும், தேடி ஓடி வந்துவிடுவார்.
ஆள் வாட்டசாட்டமாக, சிவந்த மேனியுடன் நல்ல உடல் கட்டுடன் இருப்பார். தலை முழுதுமாக வழுக்கை விழுந்து பக்க வாட்டில் இருபுறமும் கொஞ்சமாக முடி இருக்கும். நீளமான கிருதா; இடுப்பில் ஜிப் வைத்த பச்சை சிங்கப்பூர் பெல்ட்; நீல வண்ணத்தில் கட்டம் போட்ட கைலியும் கலர் முண்டா பனியனுமாய், பார்த்தால் சாயபு என்றே நினைக்கத் தோன்றும். வலது முண்டாவில் சிவப்புக் கயிற்றில் கோர்த்த வெள்ளித் தாயத்து; எப்போதும் ஐந்தாறு நாள் தாடி - அரிசியும் உளுந்து கலந்த
மாதிரி. வெற்றிலைக் காவியேறிய பற்களும், சதா மெல்லப்படும் வெற்றிலைப் பாக்கால் சிவந்த வாயுமாக எப்போதும் எங்கேயாவது போய்க் கொண்டும் வந்து கொண்டும்தான் இருப்பார்.
ஊரில் எதற்கும் நியாயம் கேட்கிற முதல் ஆள் அவர்தான். பாரபட்சமாகப் பெரிய மனிதர்கள் யார் நடந்து கொண்டாலும் துணிச்சலாகப் பொது இடத்தில் வைத்தே கேட்டு அவர்களது அதிருப்தியைச் சம்பாதித்திருப்பவர். அவரிடம் எல்லோருக்கும் எப்பொழுதும் ஒருவித தார்மீகப் பயம் இருக்கும். உரிமையை விட்டுக் கொடுத்து யாருடைய தாட்சண்யத்தையும் யாசித்து நிற்பவரில்லை. நமக்கு ஏன் என்று எதையும் விட்டு விடாதவர். எதற்கும் மறுப்பும் சமயத்தில் விதண்டாவாதமும் பண்ணுகிற சுபாவம். அநேகமாக எதனோடும் யாரோடும் ஒத்துப் போகாத மனப் போக்கு.
சிதம்பரத்தின் அண்ணன் உருவாக்கிய கைப்பந்து கழகத்தில் உறுப்பினர் ஆக லேசில் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் அண்ணனின் மென்மையான அணுகுமுறையால் தான் சேர்க்க முடிந்தது. அண்ணன் வேலைக்குப் போன பிறகு கைப்பந்துக் கழகம் செயலற்றுப் போனதும், மற்றவர்கள்மீது நம்பிக்கை இழந்தவராய், பந்தாடிய வலையிலும் பந்திலும் தன் பங்குக்கு உரியதைத் தந்தாக வேண்டும் என்று அவர் பிடிவாதம் பிடித்தது நினைவுக்கு வருகிறது. பிறகு சிதம்பரம் தலையிட்டு, அதெல்லாம் சாத்யமில்லை விட்டு விடுங்கள் என்று சமாதானப் படுத்தியபிறகுதான் ஓய்ந்தார்.
இப்படி சில முரட்டுத்தனத்தினால் அவரது வெள்ளை உள்ளமும் நேர்மையான போக்கும் எடுபடாமல், பலருக்கு எரிச்சலையும் அவரைச் சீண்டி வேடிக்கை பார்க்கிற எண்ணத்தையும் உருவாக்கி இருந்தது. அதில் முக்கியமானவர் அவரது எதிர் வீட்டு நாராயணசாமி பிள்ளை.
நாராயணசாமி பிள்ளையும் விதண்டாவாதப் பேர்வழிதான். மணியப் பிள்ளையின் வயதை ஒத்தவர். பிள்ளைப் பிராயத்திலிருந்தே மணியப் பிள்ளையைச் சீண்டி ரசிப்பதில் ஒரு திருப்தி. எதிர்வீடு வேறே. தினமும் பார்த்துக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை. மணியப் பிள்ளை எது செய்தாலும், தேவையே இல்லாமல் நக்கலான விமர்சனம் அவரிடமிருந்து கிளம்பி மணியப் பிள்ளையை எரிச்சலூட்டும். நேரிடை விமர்சனமாக இல்லாமல் ஜாடைப் பேச்சாக இருப்பதால் நேரிட்டு அவரிடம் சண்டைக்குப் போக முடியாத நிலையில் மணியப் பிள்ளை உரத்துத் திட்டியபடி தெருவில் நடப்பார். சிதம்பரம் ஊரில் இருந்தால் அவரிடம் போய்ப் புகார் செய்வார். ஊரில் தன்னிடம் அனுதாபம் காட்டக் கூடியவர் என்பதால் சிதம்பரத்திடம்தான் தனது குறைகளையும் புகார்களையும் சொல்லுவார்.
மணியப்பிள்ளை தன் தரகுத் தொழில் காரணமாய் பகல் முழுதும் வெயிலில் நிற்க வேண்டி இருந்ததால், வெகுநாட்களாய்ச் சேமித்து ஒரு கருப்பு குளிர் கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டார். அன்று மாலை இருட்டும் நேரத்தில் வீடு திரும்பியபோது கண்ணாடியைக் கழற்றாமலே தெருவில் வந்திருக்கிறார். தன் வீட்டில் இருந்தபடி அதைப் பார்த்த நாராயணசாமி பிள்ளை யாரிடமோ பேசுகிற மாதிரி எதிர்ப்பக்கம் திரும்பிக் கொண்டு "என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே கொட பிடிக்கும்னு' அதும் மாதிரி இருக்கு" என்று நக்கல் செய்ததுடன், "எங்கியாவது சந்தையிலே அஞ்சு பத்துக்குக் கெடைச்சிருக்கும்" என்று வேறு சொல்லவே மணியப்பிள்ளைக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது. உடனே திரும்பி மூன்று வீடுகள் தள்ளி இருந்த சிதம்பரத்திடம் வந்தார்.
கருப்புக் கண்ணாடியைக் கழற்றி சிதம்பரத்திடம் நீட்டி. " இதப் பாரு சிதம்பரம், இது என்னா வெலை பொறும்?" என்று கேட்டார். சிதம்பரம் வாங்கிப் பார்த்து "நல்ல ஒசத்திக் கண்ணாடி மாதிரி இருக்கே! என்னா அம்பது ரூபா இருக்குமா?" என்றார். மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்து விட்டது. உண்மையில அவர் கொடுத்த விலை ஐம்பதுதான். "என்ன இருந்தாலும் பெரிய மனுஷங்க, படிச்சவங்கண்ணா அது தனிதான். உங்குளுக்கு இதோட மதிப்பும் வெலையும் தெரியுது. ஆனா செல நட்டா முட்டிக்கு, படிக்காத முண்டங்களுக்கு - குண்டு சட்டிக் குள்ள குதிர ஓட்டற ஜன்மத்துக்குத் தெரியலியே! என்னுமோ சொல்லுவாங்களே 'எதுக்கோ தெரியுமா கற்பூர வாசனை'ன்னு அதும் மாதிரி பேசுதுங்க. இது அஞ்சோ பத்தோதான் இருக்குமாம். உச்சந்தல எரிய வெயில்ல நிண்ணு சம்பாரிச்சி, ஆசப்பட்ட பொருள வாங்கிகிட்டு வந்தா சில வக்கத்ததுங்களுக்கு வயிறு எரியுது" என்று தெருவே கேட்குமாறு உரத்துச் சத்தமிட்டார். சிதம்பரம் அவரை சமாதானப் படுத்தி 'யார் அப்படிச் சொன்னது என்ன விவரம்' என்று கேட்டதும் "ஆரு சொல்லு வாங்க? எல்லாம் அந்த ஆம்பளக் காந்தாரிதான். நான் நல்லதா ஒண்ண அனுபவிச்சா அவனுக்குப் பொறுக்காதே!" என்று அழாத குறையாய் சிதம்பரத்த்¢டம் நடந்ததைச் சொன்னார். சிதம்பரம் அவரை ஆசுவாசப் படுத்தி ஆறுதல் கூறி அனுப்பினார்.
மணியப் பிள்ளையை இன்னொரு விதத்திலும் நாராயணசாமி பிள்ளை சீண்டுவார். ஊரில் காமுட்டித் திருவிழா நடக்கும் போது முதல் நாள் காப்புக் கட்டும்போது யாராவது ஒருவரைப் பரமசிவனாகத் தேர்வு செய்வார்கள். அவர்தான் ஆற்றிலிருந்து கலசத்தில் நீர் கொண்டு வர வேண்டும். அப்படி ஒரு வருஷம் மணியப் பிள்ளை பரம சிவனாகத் தேர்வாகி காமதகனம் முடியும் வரை சுத்த பத்தத்துடன் இருக்க வேண்டி வந்தது. தினமும் இரவில் காமதகன கதை படிக்கப்படும். முறையாகப் பாடத் தெரிந்த வர்கள் ஊரில் இரண்டு மூன்று பேர் தான். நீட்டி முழக்கி ரசித்து ஒருவித லயத்தோடு பாடுவார்கள். அதற்கேற்றபடி சேரியாட்களின் பறைக் கொட்டு முழங்கும். அது தினமும் ஊரார் தவற விடாத பரவசமான நிகழ்ச்சி.
பாடலில் பரமசிவனுக்குத் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, அங்கு மூலவராக அமர்ந்திருக்கும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். திடீரென்று வலிப்பு வந்தவர் மாதிரி உடம்பை முறுக்கி குலுக்கி சாமியாட ஆரம்பித்து விடுவார்.
யாராவது பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தாங்கிப் பிடித்து அவர் கீழே விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளுவார்கள். இது காமதகனம் முடியும் வரை தொடரும். நாராயணசாமி பிள்ளைக்கு இது அதீத அலட்டலாகப் பட்டது.. 'எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், தாங்க வேண்டும் என்று அப்படிச் செய்கிறார், சாமியாவது பூதமாவது' என்று கரித்துக் கொட்டுவார். வெளிப் படையாகச் சொல்ல முடியாமலும் அதை நிறுத்த முடியாமலும் முணுமுணுத்தபடி இருப்பார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் வேறு யார் பரமசிவனாகத் தேர்வு செய்யப்பட்டாலும் காமதகனப் பாட்டு பாடும்போது தினமும் மணியப் பிள்ளைக்கு ஆவேசம் வந்துவிடும். அதிலும் இரவு ரதி மன்மதன் படம் ஊர்வலம் வரும்போது தெருவுக்குத் தெரு சாமியாட ஆரம்பித்து விடுவார் மணியப் பிள்ளை. இதற்கு ஒரு முடிவு கட்ட நாராயணசாமி பிள்ளை எண்ணினார். ஒருநாள் காமதகனப் பாடலில் உச்ச கட்டம். மன்மதன் ரதியிடம் அவளது தந்தையான பரமசிவனை இகழ்ந்து பேசும் கட்டம். ஊர்வலம் நடுத் தெருவில் வந்து கொண்டிருந்தது. மன்மதன் பக்கம் பாடுகிறவர், "அடீ! உங்கப்பன் பேயாண்டி........" என்று நீட்டி முழக்கிப் பாடியபோது ஊர்வலக் கும்பலுக்கு நடுவே "ஆய்.."என்று ஆவேசக் குரல் எழும்ப எல்லோரும் அங்கே திரும்பிப் பார்த்தனர். மணியப் பிள்ளைதான் ஆவேசம் வந்தவராய் கண்ணை மூடி உடலை முறுக்கி, கைகளை உயர்த்தியபடி குதிக்க ஆரம்பித்திருந்தார். அவர் விழுந்து விடப் போகிறாரே என்று இரண்டு பேர் அருகே ஓடி அவரை இறுக்கிப் பிடித்தார்கள்.
அதைப் பார்த்துவிட்டு நாராயணசாமி பிள்ளை அங்கு சென்று, மணியப் பிள்ளையைப் பிடித்திருந்தவர்களை ஜாடை காட்டி விலகிப் போகும்படி செய்தார். இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க மணியப் பிள்ளைக்கு ஆவேசம் அதிகமாகி ஆட்டமும் அதிகமாக ஆகும். இப்போதும் அப்படி ஆவேசமாய் அவர் குதித்த போது பிடித்தி ருந்தவர்கள் விலகிவிடவே தடாலென்று வெட்டிய மரம் போல கீழே விழ வேண்டியதாகி விட்டது. தலையிலும் உடம்பிலும் நன்றாக அடி பட்டு விட்டது. யாரும் போய்த் தூக்காதபடி நாராயணசாமி பிள்ளை பார்த்துக் கொண்டார். ஊர்வலம் நகர்ந்து விட்டது. அவரை அப்படியே விட்டுவிட்டு எல்லோரும் நகர்ந்து விட்டார்கள்.
"இனிமே ஜன்மத்துக்கும் அவன் சாமியாட மாட்டான் பாரு!" என்று நக்கலாகச் சிரித்தார் நாராயணசாமி பிள்ளை. அது உண்மையாயிற்று. அதற்குப் பிறகு மணியப் பிள்ளைக்கு ஒருபோதும் ஆவேசம் வரவில்லை.
அதை நினைத்தபோது சிதம்பரத்துக்கு மணியப் பிள்ளை மீது அனுதாபமும் நாராயணசாமி பிள்ளையின் குறும்பை எண்ணிச் சிரிப்பும் வந்தது.
"ஆனாலும் மணியப் பிள்ளை பாவம்'பா! எதிர்வீட்டு நாராயணசாமி பிள்ளை அவரை ரொம்பவும்தான் படுத்தி விட்டார்" என்றார் மருதுவிடம்.
'அவுரு மட்டும் என்னா வாழ்ந்துட்டார்? அவுரு மணியப் பிள்ளையை மட்டுமா படுத்தி எடுத்தார்? ஊரையே படுத்தியவர் தானே?" என்றான் மருது. பேசிக் கொண்டே மேலே நடந்தார்கள்.
( தொடரும் )

Wednesday, September 19, 2007
கால நதிக்கரையில் - 23
கால நதிக்கரையில் - அத்தியாயம் - 23
- வே.சபாநாயகம்
இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் 'சடுகுடு' விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி, அக்னி எல்லாம் இந்த மந்தையில் தான் நடக்கும். அவையும் கூட பஞ்சாயத்து ஏற்பட்டு பொதுத் தண்ணீர்த் தொட்டியும், சிறுவர் பூங்காவும் அமைத்தபின் நடத்த இடமின்றி நின்றே போயின. அப்புறம் பூங்காவுக்கு எதிரில் உள்ள சின்னத் திடலில் மட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடைபெற்று வந்தன.
பூங்காவை நெருங்கியதும் அதன் அலங்கோலத்தைப் பார்த்து, "என்னப்பா இப்டி ஆயிட்டுது? சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல!" என்றார் சிதம்பரம் மருதுவிடம்.
"இப்ப பஞ்சாயத்துத் தலைவர்னு யார் இருக்காங்க? பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே! நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண! மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுனாத்தானே?" என்றான் மருது.
"இங்க நாடகம் நடக்குமே, அதுவாவது நடக்குதா?"
"நடேச ஆசாரி இருந்த வரிக்கும் அன்னப் படையல ஒட்டி சிறுத்தொண்டர் நாடகம் நடந்துக்கிட்டிருந்துது. அவருக்கப்றம் எடுத்து நடத்த ஆளு இல்லே"
அந்த இடத்தில் முதன் முதல் அவர் பார்த்த தெருக்கூத்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது சிதம்பரம் மிகவும் சிறு பிள்ளை. எதிர் வீட்டுத் தொந்தி மாமாதான் அந்த நாடகத்தை பார்க்க அவரைத் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வந்தார். மேடைக்கு எதிரே சாக்குகளும், பாய்களும் விரித்து ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் உட்கார்ந்திருக்க மாமா அவரை மேடைமீதே ஒரு ஒரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். நாடகம் ஆரம்பித்து கொஞ்சம் பார்த்தவர் - நடுநிசியைத் தாண்டிவிட்ட நேரம் - மாமா மடியிலேயே தூங்கி விட்டார்.
திடீலென மேடை அதிர, இடிபோல முழக்கமும் காட்டுக் கத்தலும் கேட்டுப் பதறி எழுந்த போது பார்த்த காட்சி பயத்தை எழுப்ப, 'வீல்' என அலறினார்.
மேடையில் ஒரே கூட்டமும் இரைச்சலுமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எல்லோரும் கன்னங்கரேலென்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, அடர்த்தியான மீசையும் கனத்த புருவமும் பெரிய குங்குமப் பொட்டும் கருப்பு உடையும், கையில் உலக்கையுமாய் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிரதானமாக, பெரிய கிரீடம் தரித்து கரிய முகத்தில் பெருத்த பயங்கர மீசையும் அடர்ந்த புருவமும் நெற்றியில் விபூதிப் பட்டையும் அதன் நடுவில் பெரிய குங்குமப் பொட்டும், கனத்த சரீரத்தில் கருப்புப் பட்டு உடையும் வலது கையில் பெரிய கதாயுதமும், இடது கையில் மாட்டின் தலைக்கயிறு போல கயிற்றுச் சுருளுமாய், பயங்கரமாய் விழித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். "எம தருமன் நானே! ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே!' என்று உரத்த குரலில் பாடினார். அவரைச் சுற்றி நின்றவர்கள் கைகளில் இருந்த உலக்கைகளை 'டமால் டமால்' என மேடைமீது இடித்துப் பயத்தை அதிகரித்தார்கள்.
பயந்து வீரிட்ட சிதம்பரத்தை மாமா அணைத்துப் பிடித்தபடி, "ஒண்ணும் பயப்படாதே! எம தர்பார் நடக்குது. அதோ, அவுருதான் எமன்" என்று மத்தியில் கிரீடத்துடன் நின்றிருந்த கனத்த ஆளைக் காட்டினார். "மத்தவங்க எல்லாம் எமகிங்கரன்க" என்றார்.
மேல மந்தையில் ஒருதடவை மாரியம்மன் கோயில் விழாவுக்காக ஒரு நாடகம் நடந்தது. அது இதுபோல மேடையில் நடக்கவில்லை. அது வடக்கத்தி நாடகமாம். அவர்கள் தரையில் பார்வையாளர்களின் கண்மட்டத்தில்தான் ஆடுவார்களாம். தொந்தி மாமா சொல்லி இருக்கிறார். அதுவானால் இது போல உலக்கைகளை டமால் டமால் என்று பலகையில் இடிக்க முடியாது.
அப்போது பக்கத்துக் கிராமங்களில் அடிக்கடி நாடகமும் தெருக்கூத்தும் நடக்கும். தொந்தி மாமா சிதம்பரத்தை தோளில் தூக்கிக் கொண்டு அங்கெல்லாம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார். அப்போது பார்த்த நாடகங்களும் கூத்துக்களும், சிதம்பரத்துக்கு சிறுவயதில் படித்த கதைப் புத்தகங்களைப் போலவே இன்னும் ஞாபகத்தில் இதுக்கிறது. அப்போதைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் சோழமாதேவி நடேசன் என்பவர் எட்டுக் கட்டைச் சுதியில் உரத்துப் பாடுவது கூப்பிடு தொலைவுவரை கேட்கும். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி நாடக மேடைக்குப் புழக்கத்துக்கு வரவில்லை. அதே போல பபூன் வேஷத்துக்கு மதனத்தூர் குண்டு என்பவர் பிரபலம். இவர்களை அழைத்து நாடகம் போடுவதும் அதைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பதும் அப்போது சாதனைகளாகப் பேசப்பட்டன. தான் சோழமாதேவி நடேசனையும், மதனத்தூர் குண்டுவையும் பார்த்தது பற்றியும் அவர்களது நடிப்பையும், பாட்டையும் சின்ன வயதிலேயே தொந்தி மாமா தயவால் ரசிக்கும் வாய்ப்பு பெற்றது பற்றியும் சிதம்பரம் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பார்.
பக்கத்து நகர டெண்ட் கொட்டகைகளில் தாம் பார்த்து வந்த சினிமாக்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசிப் பரவசப்படுவது போலவே, இந்த நாடகங்களைப் பார்த்து விட்டு வரும் ஒரு வாலிபக்குழுவினர் வாய் உருக நாள் முழுதும் பேசி மகிழ்வார்கள் அவர்களில் முக்கியமானவர் எதிர்வீட்டு தங்கராசுப் பிள்ளை. அவர் நல்ல ரசிகர். நன்கு பாடவும் கூடியவர். அவருக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. அதுவரை வெளி நாடகக் குழுதான் இங்கு வந்து நாடகம் போட்டிருக்கிறது. ஏன் நம்மூர்ப் பையன் களை வைத்து நாடகம் போடக் கூடாது என்று தன் சகாக்களைக் கலந்து ஆலோசித்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களில் பலரும் ஆதரவு தரவே நாடக மன்றம் ஒன்று உருவாயிற்று.
தங்கராசுப் பிள்ளைக்குத் தெரிந்த நாடக வாத்தியார் ஒருத்தர் சிதம்பரத்தில் இருந்தார். அவர் நவாப் ராஜமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுவில் இருந்தவர். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் எல்லா நாடகங்களும் பாடம். சிவாஜி கணேசனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.அவரைப் போய் அழைத்து வந்து நாடகம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப் பட்டது. அவருக்கு குடி இருக்க ஜாகையும் தினமும் ஒருவர் வீட்டில் சாப்பாடும் ஏற்பாடாயிற்று.
முதல் நாடகம் 'சம்பூர்ண ராமாயணம்' என்று முடிவாயிற்று. ஊரிலுள்ள பாடத் தெரிந்த, தெரியாத இளவட்டங்களை எல்லாம் கட்டாயமாக நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். போருக்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்கிற மாதிரி எல்லா வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டார்கள். நிறையப்பேர் இருந்தால்தானே செலவைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும்? சின்னப் பையன்கள் கூட - ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் - வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா? மூன்று நாட்களுக்கும் மூன்று ராமர், மூன்று சீதை, பால ராம லட்சுமணர்கள், நிறைய வானரங்கள்......என்று எல்லோருக்கும் பங்களிப்பு இருந்தது.
முன்னிரவில் எட்டு மணிக்கு எல்லோரும் நாடகப் பயிற்சிக்கென்று தெரிவு செய்யப்பட்ட ஊர்ப் பொதுச் சாவடியில் கூடிவிட வேண்டும். நள்ளிரவு வரை தினமும் பயிற்சி நடக்கும். பயிற்சியைப் பார்க்க ஒரு கும்பல் தினமும் சாவடி முன் கூடிவிடும்.
தூக்கம் வராதவர்களுக்கும், பொழுது போகாத பெருசுகளுக்கும் அப்போது அதுதான் பொழுது போக்க உதவிற்று. இரவுநேரத்தில் சுகமாகத் தூங்க நிணைப்பவர்களுக்கு சாவடியிலிருந்து எழும் - தாளத்துக்கோ எந்த ஒழுங்குக்கோ ஒத்து வராத கர்ணகடூர பாட்டுக்களும் வசனங்களும் இடைஞ்சல் செய்ய, எப்போதடா இந்த ஒத்திகை முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது.
நாடக வாத்தியாரின் பாடுதான் பாவம்! எந்த விதத்திலும் - நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்(!)களுடன் - அவர் மொழியில் சொன்னால் - மாரடிக்க வேண்டி இருந்தது. 'சிவாஜி'க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது? பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! அவரது நலிந்த தோற்றமும் தள்ளாமையும் அதட்டிக் கற்பிக்கிற திறமின்மையும் காரணமாய், பிள்ளைகளுக்கு அவ்வளவாக அவரிடம் மதிப்பு இல்லை. "இவராவது சிவாஜிக்குப் பாடம் சொல்லித் தரவாவது? எல்லாம் டுப்!" என்றே அவர்கள் ஏளனம் செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவர் அடிக்கடி "சிவாஜிக்கு எங்கிட்ட ரொம்ப மரியாதை. அவரு வீட்டுலே எந்த விசேஷம்னாலும் இண்ணைக்கும் மறக்காமெ எனக்கு அழைப்பு வரும்" என்று சொல்லி வந்ததை மெய்ப்பிக்கிற மாதிரி சிவாஜியின் மகள் திருமணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் வந்தே விட்டது. அலங்காரமான, பெரிய விலை உயர்ந்த அந்த அழைப்பிழைப் பார்த்த பிறகு தான் அவர்களின் அலட்சியமும் அவமதிப்பும் நீங்கியது. ஆனாலும் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. இவர்களது அறியாமைக்காக ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. தன் அருமை தெரிந்தவராய் தங்கராசுப் பிள்ளை ஒருவர் இருப்பதே அவருக்குப் போதுமான தாக இருந்தது.
நடேச ஆசாரிதான் ராஜபார்ட். பால ராமர் தவிர்த்து இரண்டாவது மூன்றாவது நாளின் ராமர் அவர்தான். அவரை விட்டால் சுமாராகக் கூட நடிக்கவோ பாடவோ ஆள் இல்லை. நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பதிலும் வாத்தியாருக்குப் பிரச்சினைதான். வசதியற்ற அல்லது மேல் ஜாதியல்லாத ஒருவனை ராஜா வேஷத்துக் குப் போட்டு விட்டு, வசதியான மேல் ஜாதிப் பையனை அவனுக்குக் கீழே மந்திரியாகவோ சேவகனாகவோ போட்டுவிட முடியாது. கீழ்ஜாதி ராஜா வேஷக்காரன் "அடேய்! சேவகா" என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி "ப்ரபோ!" என்று தண்டனிட்டு வணங்க முடியும்? ஆகக்கூடி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆளாகத் தேர்வு செய்யாமல் அந்தஸ்துக்கு ஏற்ற வேஷமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலையில் வாத்தியார் இருந்தார். தங்கராசுப் பிள்ளை உதவியோடு எப்படியோ சமாளித்து நாடகப் பயிற்சியைத் தொடங்கினார்.
மூன்றுமாதம் கடுமையாய்ப் பயிற்சி தரப்பட்டதும், கோடையில் ஒருநாள் முதல் கன்னி நாடகத்தை வெகு விமர்சையாய் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அக்னி மற்றும் ஊர்த் திருவிழாக்களுக்கு சொந்த பந்தங்களை அழைப்பது மாதிரி இந்த நாடக அரங்கேற்றத்துக்கும் அழைப்புகள் போய் ஊரே திமிலோகப்பட்டது. இந்த உறவினர்களில் அதிகமும் நாடக நடிகர்களின் விருந்தாளிகளே. அவர்கள் வந்திருப்பது முக்கியமாக நாடகம் பார்க்க அல்ல; நாடகத்தில் மேடை ஏறும் தம் உறவுப் பையனுக்கு, கல்யாணத்தில் மொய் எழுதுகிறமாதிரி மாலை, புத்தாடைகள், மைனர்செயின், மோதிரம் முதலியவற்றை, மேடையில் ஏறி அணிவித்துக் கவுரவிக்கத்தான். நடிப்பு பாட்டு எல்லாம் அவர்களுக்கு முக்கியமே அல்ல.
அப்பொழுது சிதம்பரம், கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தார். நாடக ஏற்பாட்டைக் கவனித்த தங்கராசுப் பிள்ளைக்கு சிதம்பரத்தின் கலை ரசனையும் திறமையும் தெரியும். அதனால் உள்ளூர்ப்பள்ளி மாணவர்களைக் கொண்டு குட்டி நாடகம் ஒன்றை நடுவில் ஒருநாள் நடத்தக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிதம்பரம் ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் இருந்த "சாணக்கியன் சபதம்" என்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே கொண்ட குட்டி நாடகம் ஒன்றை சின்னப் பையன்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடை ஏற்றினார். பெரியவர்களது நடிப்பைவிட குழந்தைகளது நடிப்பு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.அதிலிருந்து மக்கள் ஒவ்வொரு வருஷ நாடகத்தின் நடுவிலும் சிதம்பரம் ஒரு குழந்தை நாடகத்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதும், அதன்படி சிதம்பரம் சிவாஜிகணேசன் சினிமாக்களில் இடையே நடித்த 'சாம்ராட் அசோகன்', 'சாக்ரட்டீஸ்' போன்ற நாடகங்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து மேடை ஏற்றி மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு அன்றைய புகழ்பெற்ற சினிமாப் பாடல் களின் மெட்டுக்களில் சில பாடல்களும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்ததும் நினை வுக்கு வருகிறது.
பாராட்டுக் கிடைத்த உற்சாகத்தில், சிதம்பரம் ஒரு முழு நாடமே எழுதி ஊர்நாடகம் நடக்கும்போது நடத்தவும், தானும் அதில் நடிக்கவும் ஆசைப் பட்டதும், அதை அறிந்த அப்பா 'நம் கௌவுரத்துக்கு மேடையேறி கூத்தாடி மாதிரி நடிப்பது குறைச்சல்' என்று நினைப்பதாக அம்மா சொன்னதும் அந்த ஆசையை விட வேண்டி வந்ததும் நினைவில் ஓடியது.
அடுத்தடுத்த நாடகங்களுக்கு நடேச ஆசாரியே நாடக வாத்தியார் ஆனார். அதற்குப் பிறகு தொடர்ந்து கோடையில் அன்னப் படையலுக்கு சிறுத்தொண்டர் நாடகத்தை நடத்துவது அவரது பொறுப்பாயிற்று.
"இப்போது நடேச ஆசாரியும் இல்ல, நாடகம் நடத்துன தங்கராசுப் பிள்ளையும் இல்ல! அதானால மந்தையில் நாடகம் பாக்குற வாய்ப்பும் இல்லாமப் போய்ட்டுது" என்று மருது சோகத்தோடு சொன்னான்.

Saturday, September 08, 2007
கால நதிக்கரையில் - 22
கால நதிக்கரையில் - அத்தியாயம் - 22
- வே.சபாநாயகம்
அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் அப்படியேதான் அன்று பார்த்த மாதிரியே இருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடியே வண்ணமற்று, பாசி ஏறி, பீடங்களில் சின்னச் சின்ன அரசங்கன்றுகள் முளைத்திருந்ததில் மாற்றம் எதுவும் காணோம். புதுப்பிக்கவோ வண்ணம் பூசவோ அக்கறை காட்டவில்லை என்றாலும் பின்னப் படுத்தப்படுத்தாமலும் சேதம் எதுவும் விளைவிக்காமலும் இருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஒருவேளை அய்யனாரிடம் இருக்கும் பயம் காரணமாக யாரும் அதைத் தொட்டிருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது.
சின்ன வயதில் சிதம்பரம் அவ்வளவு பெரிய அய்யனார் சுதைச் சிற்பத்தை வேறு எங்கும் பார்த்தில்லை. சிலை அமர்ந்திருக்கும் பீடமே ஒர் ஆள் உயரத்துக்கு இருக்கும். சிலை அதற்கு மேல் பிரம்மாண்டமாக இரண்டு ஆள் உயரத்துக்கு இருக்கும். பெரியவர்களும் அண்ணாந்து தான் அய்யனாரின் முகத்தைப் பார்க்க முடியும். பல ஊர்களில் இருப்பது போல உறுப்புகள் சரியான விகிதத்தில் அமையாது ஏதோ குறை இருக்கிற மாதிரி இல்லாமல், கச்சிதமான சிற்ப சாஸ்திர அளவுக் கேற்றபடி அமைக்கப் பட்டதாக அழகாக கம்பீரமாக இருக்கும். அழகு மட்டுமிருந்தால் உக்கிரம் இருக்காது என்பதாலோ என்னவோ, கோழி முட்டை அளவுக்குப் பெரிய விழித்த கண்கள் கருநீலக் கண்ணாடிக் கோலிகள் போல ஜொலிக்கும்படியும், முறுக்கிய பெரிய கனத்த மீசைகளுடனும் சிற்பி செய்திருக்கக் கூடும். சின்னப் பிள்ளை கள் தனியே நின்று பார்த்தால் பயந்து விடுவார்கள். ஆனால் கலையழகு மிக்க அப்படிப் பட்ட அய்யனார் சிலையை அவர் இதுவரை பார்த்ததில்லை.
குதிரைகள் இரண்டும்கூட அம்சமாய், சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை போல அழகாய் இருக்கும். சேணம், கடிவாளம் எல்லாம் வேலைப் பாடுகளுடன் இருக்கும். வலுவான கால்கள் திடமான குளம்புகளுடன் ஊன்றியபடி வேட்டைக்குக்
கிளம்பும் துடிப்புடன் சற்றே தலைதாழ்த்து நிற்கிற மாதிரி தெரியும். வலது பக்கக்குதிரையின் அருகில் கடிவாளத்தைப் பிடித்திருக்கும் வீரனின் காலடியில் ஒரு துடியான வேட்டை நாயும் ஓடத் தயாராக நிற்பதுபோலக் காணப்படும். மொத்தத்தில் அது ஒரு அழகிய சிற்பக் கூடம் போலவே சிதம்பரத்துக்குத் தோன்றியது. சின்ன வயதில் பயமுறுத்தல் காரணமாக அருகில் சென்று பார்த்திராததால் அதன் சிற்ப அருமை தெரியாது போயிற்று. ஒரு பயம் கலந்த கவர்ச்சி மட்டுமே அந்த வயதில் அவருக்கு அவற்றைக் கடக்கும் போது இருந்தது. இப்போது இது நம்மூர்க் கலைக்கூடம் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளலாம் என்கிறமாதிரி ஒரு விதப் புத்துணர்வுடன் சிலைகளை வலம் வந்தார். நெடுஞ்சாலைகளிலும், சில ஊர்களிலும், திரைப்படங்களிலும் - பளீரென்கிற வண்ணப் பூச்சுடனும், என்றும் புது மெருகுடனும் காணப் படுகிற அய்யனார் சிலைகளைப் போல இது இல்லை என்றாலூம் வண்ணம் பூசாமலே கருமையும் பசுமையும் கலந்த அந்தப் பழைமை அவருக்குப் பிடித்திருந்தது.
எல்லா ஊரையும் போல அய்யனார் பற்றிய கதைகள் இங்கும் உண்டு. தொந்திமாமா சின்ன வயதில் நிறையச் சொல்லி இருக்கிறார். நள்ளிரவில் அய்யனார் தீவட்டி வெளிச்சத்தில் தன் படைகளோடு கணகணவென சேங்கண்டியும் மணியும்
ஒலிக்க, தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்குப் போவார் என்றும் அப்போது எதிர்ப்படும் யாரும் ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும், அவர் வேட்டைக்குப் போவதை யாரும் வீட்டுக்கு வெளியில் நின்று பார்க்கவும் கூடாது என்றும் மாமா
சொன்னவை ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போதெல்லாம், வீட்டுத் தெருநடையில் அவரும் மற்ற பிள்ளைகளும் படுத்திருக்கையில், எழுப்பி உள்ளே போய்ப் படுக்க வைக்க இதுமாதிரி அம்மா பயமுறுத்தியதுண்டு. ஆனால் தொந்தி மாமாவிடம், தான்
ஒருபோதும் இரவில் அப்படி அய்யனார் வேட்டைக்குச் செல்லும் ஆரவாரத்தைக் கேட்டதில்லையே என்று கேட்டபோது, அய்யனார் வேட்டைக்குப் போகும்போது மக்கள் எல்லாம் அப்போதைக்குப் பிரக்ஞை இல்லாத மாயத் தூக்கத்தில் இருப்பார் கள் என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பு வந்தது.
அய்யனார் கோவில் பற்றி இன்னொரு பயமுறுத்தலும் உண்டு. உச்சி வேளை யில் பெண்கள் - குறிப்பாக இளம்பெண்கள் அய்யனார் கோவில் பக்கம் போகக் கூடாது என்றும் போனால் அங்கே இலுப்பை மரத்தில் வாசம் செய்கிற முனி பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். யாராவது இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மயக்கம் போட்டு விழுந்தாலோ, பயத்தால் அரண்டவள் போல் விழித்தாலோ - அய்யனார் கோவில் வழியே உச்சி நேரத்தில் போனதால்தான் என்று தீர்மானமாய்ச் சொல்லி
விடுவார்கள். பூசாரியைக் கூப்பிட்டுக் காட்டினால் அவன் நிச்சயம் அது இலுப்ப மரத்து முனியின் சேட்டைதான் என்றும் பூஜை போட்டு ஓட்டியாக வேண்டும் என்றும் சொல்வான். இலுப்பை முனியின் தயவில் பூசாரிக்கு அடிக்கடி பிழைப்பு நடக்கும்.
அப்படி ஒருதடவை ஒரு பெண்ணுக்குப் பூசாரி பேயோட்டிய நிகழ்ச்சியை அருகிருந்து பார்த்தது சிதம்பரத்துக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
எதிர் வீட்டுக்கு புதிதாக ஒரு சின்னப்பெண் திருமணமாகி வந்திருந்தாள். வீட்டு நினைவோ என்னவோ அவள் எப்போதும் சுரத்தின்றியே இருந்தாள். அதனால் அவள் கணவனும் மாமியாரும் அவளை எதாவது குற்றம் குறை சொல்லி முகம் சுருங்க வைப்பார்கள். ஒருதடவை மதிய நேரத்தில் அவள் மடேலென்று நின்ற நிலைக்கு வெட்டிய மரம்போல விழுந்துவிட்டாள். சாப்பாடு நேரம் என்பதால் கனவன் வீட்டில் தான் இருந்தான். அவள் விழுந்ததைப் பார்த்துவிட்டு அவள் மாமியார் வீரிட்டாள். கணவன் ஓடித் தூக்கினான். அக்கம்பக்கம் இருந்தவர்கள் கணத்தில் கூடி விட்டார்கள். பெண் நினைவிழந்து மரக்கட்டைபோலக் கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்தும் காற்றுப் பட விசிறியும் அவள் அசையவில்லை. ஆளுக்கு ஆள் ஒன்று சொல்ல ஆரம்பித் தார்கள். தெருவின் கடைசி வீட்டுப் பாட்டி சொன்னாள்: "இப்பதான் அவ அய்யனார் கோயில் பக்கத்திலேர்ந்து வந்ததப் பாத்தேன். அதான்!"
எல்லோருக்கும் அதுதான் காரணமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே பூசாரிக்கு ஆள் போயிற்று. அவன் வந்து விபூதி பூசி வேப்பிலை அடித்து மந்திரித்ததும் அவள் லேசாக அசைந்தாள். "இது அந்த இலுப்ப முனியோட வேல
தான்! ஒண்ணும் பயப்படவேணாம். கழுதெய நான் வெரட்டி அடிக்கிறேன்" என்று கணவனுக்கும் மாமியாருக்கும் தைரியம் சொன்னான். "பாவம், புதுப் பொண்ணு! பூசாரி சொன்னபடி செய்யப்பா" என்று சொல்லி விட்டுக் கூடி இருந்தவர்கள் கலைந்தார்கள்.
அதன்படியே இரண்டு நாளில் முனிஓட்டுதல் ஆரம்பமாயிற்று. பூசாரி, சிந்தை சரியாக உள்ளவர்களே பார்த்ததும் பயப்படும்படியான பயங்கர ஒப்பனையுடன் - அகன்ற நெற்றியை முழுதும் அடைத்து விபூதி பூசி, புருவத்துக்கும் முன் நெற்றிக்கும் இடையில் பெரிய ரூபாய் நாணயத்தை விடப் பெரிதான ரத்தச் சிவப்பில் குங்குமம் வைத்து, திருகிவிட்ட அடர்ந்த மீசையுடன் கையில் உடுக்கையும் வேப்பிலைக் கொத்துமாக வந்தான். முனி பிடித்திருப்பதாக அவன் சொன்ன பெண்ணைக் கூடத்தில் உட்கார வைத்து, புகை மூட்டத்தை எழுப்பி, உடுக்கையை ஓங்கியடித்து, கர்ணகடூரமான குரலில் ஏதொ ஒரு பாட்டைப் பாடியதே அந்தப் பெண்ணை மிரட்டி இருக்கும். சடேலென்று ஒரு குத்து திருநீரை அள்ளிப் பெண்ணின் முகத்தில் அடித்தான் பூசாரி. அதில் சற்றே மருண்டு தலையை அசைத்து தூசிப்படலத்தை விலக்க முயன்றவளை நோக்கி வேகமாக வேப்பங் கொத்தை விசிறிச் சுழற்றினான். "ம்ம்ம்.....ஆடு.....!" என்று தலையில் வேப்பங் கொத்தால் அடித்தான். பாவம், பெண் அரண்டு போய்க் கண்கள் சொருக ஒரு பக்கமாய்ச் சரிந்தாள்.
"ஏய்! எங்கிட்டியே ஒன் வேலயக் காட்டுறியா? இந்த ஜாலக்குக்கெல்லாம் நான் ஏமாந்துட மாட்டேன். ம்ம்ம்...ஆடு!" என்று மறுபடியும் வேப்பங் கொத்தால் அடித்தான். "ஐயோ! அடிக்காதே அடிக்காதே!" என்று என்று அவள் அரற்றினாள். "அப்ப ஆடு!" என்று வேப்பங் கொத்தைச் சுழற்றி விசிறினான். அடிக்குப் பயந்தோ அல்லது 'தந்னைப் பேய் பிடிக்கவில்லை, மாமியார், கணவன் இருவரும் அனுசரணையாக இல்லாமல் வதைப்பதுதான் காரணம்' என்றால் யாரும் தனக்கு ஆதரவாகப் பேசப் போவதில்லை என்று உணர்ந்தோ, அவள் தலை லேசாக ஆட ஆரம்பித்தது.
'
"பாத்தியா! அடின்னதும் அதுக்குப் பயம் வந்துடுச்சி" என்று அதற்குள் கூடி விட்ட அண்டை அயல் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராக இருந்தார். பெண்ணின் தலையாட்டம் பூசாரியின்
வேப்பங் கொத்தின் வேகச் சுழற்சிக்கு ஏற்ப வேகமெடுத்து சக்கர வட்டமாகச் சுழன்றது. பெண்ணுக்கு நீண்ட கூந்தல். அது பரந்து விரிந்து சுழன்றது பயமூட்டுவதாக இருந்தது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது. சுழற்சிக்கு ஏற்ப உடல் இடுப்பு வரை ஆட்டுக்கல் சுழற்றப் படுவது போல வளைந்து திருகி சுழன்றது. பிறகு எத்தனை
நாளைக்கு உடம்பு வலிக்குமோ என்று மனம் கசிந்தார்.
''ஏய்! சொல்லு யாரு நீ? இலுப்ப மரத்து முனிதானே?" என்று வேப்பங்கொத்தால் பெண்ணின் தலையில் சுளீரென்று அடித்தான் பூசாரி. பார்த்துக் கொண்டி ருந்த சிதம்பரத்துக்கு வலித்தது. 'கிறீச்'சென்று கத்தியபடி அந்தப் பெண் பின்னால்
சாய்ந்து பிரக்ஞை அற்றவளானாள்.
"சரி! இண்ணைக்குப் போதும். நாளைக்கு மீதியக் கேட்டுக்கிறேன்" என்று பூசாரி தன் கடையைக் கட்டினான். 'ஆருன்னு சொல்லி, போறேன்னு சொல்ற வரைக்கும் பூசாரி உடமாட்டான்' என்று ஒரு கிழவர் தனக்குச் சொல்கிறமாதிரி மற்றவர்களுக்கும் சொன்னார். இப்படி எத்தனையோ முறை பார்த்திருக்கிற அனுபவம் அதில் தொனித்தது.
இப்படி எத்தனையோ முறை அந்தச் சித்திரவதை தொடர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு புதிதாக வாழ வந்த இடத்தில், இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லை. அறிவியலும், மருத்துவ ஆராய்ச்சிகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலை யிலேயே கூட 'இது மூட நம்பிக்கை, பேயும் இல்லை முனியும் இல்லை - இது மனோவியாதி; மருத்துவரிடம் காட்டுங்கள்' என்று உணர்ந்து வழிகாட்டுபவர்கள் இல்லாத போது, அறியாமையும் மூடநம்பிக்கையும் மிகுந்த அந்தக் காலத்தில் யாருக்கு அவளைக் காப்பாற்றத் தெரிந்திருக்கும்? கடைசியாக பூசாரியே அலுத்துப்போய், "இது இங்கக் கட்டுப்படலீங்க; பேசாம குணசீலத்துக்கு அழச்சிக்கிட்டுப்போயி அங்க ஒரு மண்டலம் கோயிலச் சுத்த வையுங்க" என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினான்.
பிறகு ஓராண்டுக்கு மேலாகப் பிரமை தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அவள் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததும்தான் சரியாயிற்று. அவளுக்குச் சரியாயிற்று என்பதை விட அவளுடைய மாமியாருக்கும் கணவனுக்கும் புத்தி சரியா
யிற்று என்று சொல்லவேண்டும்.
"சரி, போலாமா?" என்ற மருதுவின் குரல் சிதம்பரத்தைப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டது.
"ஒவ்வொரு எடமும் பழைய நினைவுகளக் கிளறிவிட்டுடுது" என்றபடி நடந்தார்.
இருவரும் அய்யனார் கோவில் திடலிலிருந்து கீழமந்தையை நோக்கி நடந்தார்கள்.

கால நதிக்கரையில் - 21
காலையில் சொன்னபடியே எட்டு மணிக்கு மருது அப்பு வீட்டுக்கு வந்து விட்டான். இருவரும் மீண்டும் சிவன் கோயில் குளத்தை நோக்கிச் சென்றார்கள். குளத்தின் கீழ்க்கரைக்குச் சென்றார்கள்.
அங்கு புளிய மரத்தடியில் ஒரு கொல்லன் உலைக்களம் இருந்தது. அங்கு ஆறுமுக ஆசாரியும் அவரது இரு மகன்களும் எப்போதும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பார்கள். சிதம்பரம் சிறுவயதில் அங்கு போய், அப்பாவு ஆசாரியின் சிற்ப வேலையைப் பார்க்கிற அதே சுவாரஸ்யத்தோடு ஆறுமுக ஆசாரியின் வேலையை ஆர்வத்தோடு பார்ப்பார். இரும்பு செக்கச்செவேலென்று பழுத்து ஒளிர்வதையும் அதைத் தணலிலிருந்து ஆறுமுக ஆசாரி இடதுகைக் குறடாவால் எடுத்துப் பட்டறை
மீது வைத்ததும் அவரது இரு மகன்களும் மாறி மாறி சம்மட்டியால் படீல்படீலென ஓங்கி அடிப்பதையும் பார்ப்பது அவருக்கு இன்னொரு பிடித்தமான காட்சியாகும்.
இப்போது அந்த இடத்தில் உலைக்களம் இருந்த சுவடே இல்லாமலிருந்தது.
"எங்கேப்பா ஆறுமுக ஆசாரி உலைக்களம்?" அன்று மருதுவைக் கேட்டார்.
"ஆறுமுக ஆசாரிக்கப்றம் அவரோட மகன்கள் காலம் வரைக்கும் பட்டறை இருந்துது. அப்பறம் அடுத்த தலமுறைக்குத் தொழில்ல நாட்டம் இல்லே. வேலையும் முன்ன மாதிரி வரலே. அதனால பசங்க எல்லாம் வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப்
போய்ட்டானுவ. நடேச ஆசாரி மகன் சண்முகம்தான், தான் போன வழி அவங்க¨ளையும் அழச்சிக்கிட்டுப் போய்ட்டான்" என்றான் மருது.
"போகட்டும், அப்பிடியாவது இந்தத் தலமுறையாவது செழிப்பா இருந்தா சரிதான்"
"அப்டி ஒண்ணும் டவுன் பக்கம் மாதிரி, திரும்பி வந்து வீட்டக்கட்டி நெலம் நீச்சுன்னு வாங்குன மாதிரி இல்லீங்க. இருக்குற மனைய, நெலத்த அடமானம் வச்சு லட்சக்கணக்குலே கட்டி, வெளிநாடு போய்ட்டு வந்தா, கடனத் திருப்பறதுக்கும்
நெலத்த மூக்கறத்துமே சரியாப்பூடுது. 'குபேரப்பட்டணம் கொள்ள போனாலும் அதிர்ஷ்டம் கெட்டவனுக்கு ஆப்பக் காம்புதான் கெடைக்கும்'கறது நம்ம ஊர்ப் பசங்களுக்குத்தான் பொருந்தும்" என்றான் மருது.
மேலும் நடந்து ஊர்த் தொழிலாளிகள் குடி இருக்கும் கடைசித் தெருவுக்கு வந்தார்கள். முனையில் இரண்டு குயவர் குடும்பம் இருந்தது. எதிரில் இருந்த சூளை எப்போதும் கனிந்து கொண்டிருக்கும். பக்கத்தில் சலவைத் தொழிலாளியின் வெள்ளாவி அடுப்பும் புகைந்து கொண்டிருக்கும். நாவிதனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையும் பக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாமே சுவடற்று இருந்தது.
சிதம்பரம் கேட்பதற்கு முன்பே மருது சொன்னான். "ஒரு தொழிலாளியும் இப்ப ஊர்ல இல்லீங்க. வெலவாசியும், வேல இல்லாததுமா எத்தினி நாளைக்குத்தான் தாக்குப் புடிக்க முடியும்? எல்லாரும் டவுனுப் பக்கம் போய்ட்டான். காசு பெரட்ட
முடிஞ்சவன் வெளிநாட்டுக்குப் பறந்துட்டான். அதுமட்டுமில்லீங்க - குடி ஆளுங்களும் விவசாயத்துலே வயிறு ரொம்பாதுண்ணு டவுன்பக்கம் கொத்தன் சித்தாளு வேலைன்னு போய் வந்துக் கிட்டிருக்கானுவ. வீட்டுலே சமைஞ்சு இருக்குற பொண்ணுங்களும் டவுன் கடைகள்ள எடுபிடி வேலைக்குப் போயாச்சு. காலைலே எட்டுமணிக்கப்றம் ஊரே வெறிச்சோன்னு போயிடும்."
"அது சரிதான். இனிமே வீட்டுலே அத்தினி பேரும் ஒழச்சாத்தான் முடியும். அப்டியாவது வீட்டுல சோம்பி இருக்காமப் பொழப்பப் பாத்துக்கிட்டா நல்லதுதான்" என்றார் சிதம்பரம்.
'ஆனா ஒண்ணு! பொம்பளப் புள்ளைங்க எல்லாம் அப்பன் ஆத்தாள எத்¢ர் பாக்காம தங்களோட சம்பாத்தியத்திலே வேண்டியத வாங்கிக்கவும் நாகரீகமா சுடிதார், சல்வார் கமீஸ¤ன்னு விதம்விதமா உடுத்திக்கவும் குறையில்லாம இருக்கு. அப்பிடி அதுங்க நவநாகரீகமா உடுத்திக்கிட்டு வேலைக்குப் போறது ஒருவகையில முன்னேற் றம்ணுதான் சொல்லணும்" என்று ஊரின் வளர்ச்சியைச் சொன்னான் மருது.
பேசியபடி தெருக்கோடியில் இருந்த சிதம்பரம் வீட்டின் போரடி நெல் களத்துக்கு வந்தார்கள்.
ஊரிலேயே பெரிய களம் அது. நெல் அறுவடை ஆனதும் களத்தில் போராக நெல்கட்டுகள் அடுக்கி இருப்பதை இரவில் பார்த்தால் இரண்டு மூன்று யானைகள் நிற்பது போலிருக்கும். நெல்லடித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வரை - அப்பா மாலை அனுஷ்டானமெல்லாம் முடித்துக் கோயிலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிட்டுவிட்டுக் களத்துக்குக் காவலுக்காகப் படுக்க வர இரவு எட்டு மணியாகிவிடும். அப்பா வரும் வரை பண்ணையாள் தங்கவேல் துணையுடன் காவலுக்கு இருப்பது சிதம்பரம்தன்.
மாலை ஆறுமணிக்குக் கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கீழ்க் கோடியிலிருந்த களத்துக்கு சிதம்பரம் வரும்போது களத்துக்குத் தென்புறம் இருக்கும் ஐயனார் கோவிலை ஒட்டியுள்ள பாதை வழியாகத்தான் வரவேண்டும். பத்து வயசுக்குள்தான் அப்போது அவருக்கு இருக்கும். ஐயனார் கோயில் அருகில் வரும் போது அவருக்கு உள்ளே நெஞ்சுக்குள் இரட்டை உலக்கைபோட்டு இடிப்பது போல 'திக் திக்' என்று இருக்கும். திரும்பிப் பார்க்கப் பயப்பட்டு வேகமாக நடப்பார். ஒரு
சின்னக் குருவியின் சிலும்பல்கூட தூக்கிவாரிப்போடச் செய்யும். உயிரைக் கையில் பிடித்தபடி பரபரவென்று நடந்து களத்தை அடைவார். முன்னிலவு இல்லாத நாட்களில் களம் 'கரு கும்' மெனும் இருட்டில் முழ்கி இருக்கும். அய்யனார் குளத்துத் தவளைகள் வேறு 'கொரா கொரா' என்று கோஷ்டிகானம் மாதிரி வறட்டுக் கூச்சல் எழுப்பியபடி இருளின் பயத்தை அதிகப் படுத்தும்.
களத்தின் வேலிப்படலின் வாசலில் தங்கவேலு காத்திருப்பான். "பயப்படாம வந்தீங்களா சின்னபுள்ளே?" என்று வரவேற்பான். "தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப் போன இருளம் பொண்டாட்டிதான் இந்த எடத்துலே நாக்குட்டியா அலயுது. அது
கிட்ட வந்தா, 'சீ!நாயே! இதப்பாரு செருப்பு!'ன்னு கால் செருப்பத் தூக்கிக் காட்டுனா கழுதை அலண்டுகிட்டு ஓடிப்போயிடும்" என்றான் ஒருதடவை. அதைக் கேட்டதும் சிதம்பரத்துக்கு மயிர்க் கால்கள் பயத்தில் சிலிர்த்தன. அதற்குப் பிறகு களத்துக்கு வரும்வரை காலருகில் நாய் தொடருவது போல் பயம் எலும்புக் குருத்துக்குள் ஓடும்.
அப்பா வருகிறவரை தங்கவேலு ஏதாவது கதை சொல்லிக் கொண்டிருப்பான். அதெல்லாம் அனேகமாகப் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, தீவட்டிக் கொள்ளைக்காரன் கதைகளாகத்தான் இருக்கும். திகிலோடு, அவனைத் தொட்டுவிடாமல் அருகில்
நெருங்கி உட்கார்ந்து கொள்ளுவார். ஒருவேளை அப்படி நெருங்கி வரட்டும் என்று தான் அவன் பயமூட்டும் கதைகளைச் சொல்லுகிறானோ என்றுகூடத் தோன்றும்.
சில சமயங்களில் ஊருக்குள், சேரிக்குள் நடக்கிற கள்ளக்காதல் உறவுகளை ரசமாக, சப்புக்கொட்டிக் கொண்டு சொல்வான். வாய்வழிப் போர்னோகிராபியாக அவை இருக்கும். சில நேரங்களில் கிராமத்து வாத்ஸாயனாராக மாறிவிடுவான். பெண்களின் வகைகளையும், சாதி வாரியாக எந்தச் சாதிப் பெண்ணுக்கு எந்த அங்கம் அழகாய் இருக்கும் என்பதையும் சின்னப் பையனிடம் பேசுகிறோமே என்கிற உறுத்தலே இல்லாமல் - சிதம்பரம் தான் அவனது மன அவசங்களை ஓடிப்போகாமல் கேட்கக்கூடிய சுமைதாங்கியென எண்ணி, விஸ்தாரமாய் விளக்கிக் கொண்டிருப்பான். அப்பாவிடம் அவன் இப்படியெல்லாம் பேசுவதைச் சொல்லலாமா, சொன்னால் 'நீ ஏன் காது குடுத்துக் கேட்டே?' என்று திட்டுக் கிடைக்குமோ என்று பயந்து தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டுவிடுவார் சிதம்பரம். எப்போது நெல்லடிப்பு முடிந்து களம் காலியாகி காவல் வேலைக்கு முடிவுக்கு வருமோ என்று இருக்கும்.
ஓருவழியாக அப்பா வந்ததும், கையில் லாந்தருடன் தங்கவேலு துணைக்கு வர சிதம்பரம் வீடு திரும்புவார். அவரை வீட்டில் விட்டுவிட்டு அம்மா தரும் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு தங்கவேலு லாந்தருடன் அப்பாவுக்குத் துணையாகக் களத்தில் படுக்கத்
திரும்புவான்.
"என்ன அப்டியே சில மாதிரி நின்னுட்டீங்க?" என்று மருது சிந்தனையைக் கலைத்தான்.
"பழைய ஞாபமெல்லாம் வந்துது. சின்ன வயசுலே இங்க பயந்தபடி காவலுக்கிருந்தது, அப்பத் தொணைக்கு இருந்த தங்கவேலு - எல்லாத்தையும் நெனச்சுக் கிட்டேன். எவ்வளவு ஒட்டுதலான ஆட்கள்! பகல்ல காவல் இருந்தப்ப வேல செய்ஞ்ச பண்ணையாட்கள் வீட்டுப் பெண்களும் நினைவுக்கு வர்ராங்க. பூவாயின்னு ஒருத்தி எங்க கிட்ட ரொம்ப வருஷமா வேல செஞ்சாளே ஞாபகம் இருக்கா? அவுளுக்கு எங்கிட்ட சதா ஏதாவது வம்பு வளக்கறதிலே ஒரு சந்தோஷம்.
'ஏங்க சின்னாண்டே! எம் பொண்ணத் தரேன் கட்டிகிறீங்களா?' என்பாள். 'சீச்சீ! அம்மாக்கிட்ட சொல்லுவேன்' என்று நான் அருவருப்புடன் உதறுவேன். சாய்ங்காலம் வேல முடிஞ்சு அவங்க வீடு திரும்புறப்ப அம்மாக்கிட்ட முந்தானையை ஒதறிக் காட்டிட்டுக் கெளம்புவாங்க. பூவாயியின் மடியில ஏதோ முடிச்சு போலக் கனமாகத் தெரியறதப் பாத்துட்டு நான், 'அதென்ன முட்டா இருக்கு? அங்க எதியாவது ஒளிச்சு வச்சிருக்கியா?' ன்னு சிறுபிள்ளத்தனமாக் கேப்பேன். முந்தானைய மறுபடியும் ஒதறி 'அப்றம் முழுசா அவுத்துடுவேன்!' என்று சிரித்தபடி பயமுறுத்துவா. அம்மா 'போடி வம்புக்காரி. அறியாப்புள்ளக்கிட்ட என்ன பேசறதுன்னு கெடை
யாதா?' ன்னு கண்டிப்பாங்க. எவ்வளவு எளிமையான வெள்ளந்தியான ஜனங்க! இப்ப அதும் மாதிரி வேலை முடிஞ்சதும் துணிய ஒதறிக்காட்டச் சொல்ல முடியுமா?"
என்றார் சிதம்பரம்.
"அதென்னவோ நெசந்தான்! கவுடும் சூதும் படியளக்கிற பணக்காரங்கக் கிட்டதான். காலம் மாறிப்போச்சு. இப்ப அந்த ஜனங்களுக்கும் வசதி வாழ்வுன்னு வந்தப்றம் எல்லாருக்குமே கவுட்டுத்தனமும் ஏமாத்துப் புத்தியும் வளந்துட்டுது" என்றான் மருது.
"களத்துலே - கட்டுக்கட்டா நெல்லடிச்சதும், எதிரெதிரா ஆளுங்க நின்னு முறத்தாலே நெல்ல வாரி வாரி ஆகாசத்துல வீசித் தூத்துனதும், நெல் மலயாக் குவிஞ்சிருந்ததும் இன்னும் அப்பிடியெ கண்ணுல நிக்குது. வண்டியிலே நெல் மூட்டைகள அடுக்கி ஏழெட்டு நட வீட்டுக்கு ஆளுங்க கொண்டு போனதும், அதப் பட்டற கட்டி குட்டித் தேர்கள் மாதிரி வீட்டுக்குப் பக்கத்துலே கெணத்தடியிலே வச்சதும் வருஷா வருஷம் பாக்கறதுக்கு அலுக்காத காட்சி!" என்று சிதம்பரம் அந்தக் கால நிகழ்ச்சிகளை மருதுவுக்குச் சொல்கிற மாதிரி தனக்கும் சொல்லிக் கொண்டார். "பட்டற கட்டறதுக்கு களத்துலேர்ந்து நம்ம வீடுவரைக்கும் ஆளுங்க திரிச்ச வைக்கோல் பிரி, மலப்பாம்பு தெரு நெடுக்கப் படுத்துக் கெடக்கிறமாதிரி வளைஞ்சு வளைஞ்சு கெடந்ததும், அதப் பெரிய பெரிய பந்துகளா பந்துகளா ஆளுங்க சுருட்டுனதும் மறக்காத காட்சிதான். தெருவெல்லாம் வைக்கோல் சிதறி மெத்தமேல நடக்குற மாதிரி ரெண்டு நாளைக்கு நடக்கச் சுகமா இருக்கும். அப்போது பரவி இருந்த புது வைக்கோல் வாசனைகூட இப்பக் காத்துலெ மணக்குறமாதிரி ஒரு பிரமை ஏற்படுது "
"எனக்கு வினவு தெரிஞ்சி நம்ம வீட்டுல நான் நெல்லு பட்டறயப் பாத்ததில்லியே!" என்றான் மருது.
"பின் நாளுலே, பட்டறய ராவோட ராவா அறுத்துக் களவாடுன திருட்டுப் பயம் அதிகமானதும் அப்பா வீட்டுக்குள்ளவே பெரிய பெரிய மரத்தொம்பகளச் செஞ்சு அதுல நெல்லப் போட்டுட்டாங்க" என்றார் சிதம்பரம்.
"வீட்டுக்குள்ளப் பத்திரப் படுத்தி வச்சும் பத்திரமில்லாத நெலமையும் வந்துது.கடுமையான ரேஷன் அமுலுக்கு வந்தப்போ சர்க்காரு பகலிலியே ஊடுபூந்து அதிரடிக் கொள்ள அடிச்சது ஒனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் மருதுவை.
பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்து சொன்னார்: "ரேஷன் ஆரம்பிச்சப்போ இப்ப மாதிரி விவசாயிங்க எங்க நெல்லை அரசாங்கம் கொள்முதல் பண்ணணும்னு கேக்கலே. அப்ப நெல் விளைச்சல் இப்ப மாதிரி இல்லே. அதனாலே அரசாங்கமே கட்டாயக் கொள்முதல் பண்ணுச்சு. வீடுவீடா தாசில்தார் தம் படையோட வந்து விவசாயிகளைக் கட்டாயப் படுத்தி நெல்லை அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. கொள்முதல் கட்டாயத்துக்குப் பயந்து பலபேர் பகல்ல ஊர்லியே தென்படமாட்டாங்க.
"ஒரு தடவ ஒரு முரட்டுத் தாசில்தார் அப்பா கிட்ட ரொம்ப மரியாத இல்லாம நடந்துட்டான். அப்பா நெல் தர சம்மதிச்சாலும் விளைச்சல் முழுதுமே தரணும்னு அவன் கட்டாயப்படுத்துனப்ப, அப்பா 'அவ்வளவையும் கொடுத்துட்டா எங்களுக்குச்
சாப்பாட்டுக்கு வேணாமா? ஆளுகளுக்குக் கூலி தர வேண்டாமா?' ன்னு நியாயமாத்தான் கேட்டாங்க. ஆனா அந்தத் தாசில்தார், "சாப்பாடுக்கு இல்லேண்ணா கடையில அரிசி வாங்கிச் சாப்புடு. ஒரு வேள மட்டும் சாப்புடு. ஊரே பட்டினி கெடக்குறப்ப ஒனக்கு மட்டும் என்ன மூணு வேளச் சாப்பாடு?' ன்னு ஒருமையில, ஊர் முழுக்க வேடிக்கப் பாக்க, கேவலமாப் பேசுனான். முரட்டுத்தனமா வீட்டுக்குள்ள புகுந்து தொம்பையக் காலி பண்ணி சுத்தமா அள்ளிக்கிட்டுப் போய்ட்டான். பாத்தவங்க எல்லாம் வாயுருகிப் போய்ட்டாங்க."
"ஆமாமா! எங்கப்பா சொல்லிருக்காரு. ஆனா அந்தத் தாசில்தாரு அடுத்த மாசமே பக்கவாதம் வந்து கைகால் விழுந்து நாக்கு இழுத்துப் போச்சுன்னும் ஜனங்க எல்லாம் 'பெரிய பூஜை பண்ணுறவர், தர்மவான் - அவரக் கண்டபடி பேசுனதாலே தான் கடவுள் வாய ஒருவழியாப் பேசாம அடைச்சுட்டார்'னு பேசிக்கிட்டதாவும் சொல்லுவார்" என்றான் மருது.
"அறிவுபூர்வமா அப்டிச் சொல்றது சரியில்லதான். ஆனா அப்போதைக்கு அது ஏதோ அப்பா பட்ட மனக் காயத்துக்கு ஒரு ஆறுதலாத்தான் பட்டுது" என்ற சிதம்பரம், "வா அய்யனார் கோயிலப் பாத்துட்டு வரலாம் என்று நடந்தார். மருதும் நடந்தான்.

கால நதிக்கரையில் - 20
இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர் ஒன்றில் எம்.ஜி.ஆரின் வண்ணப் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. படம் தத்ரூபமாக இருந்தது.
"அட! யாருப்பா வரைஞ்சது இந்தப் படத்த? அப்பாவு ஆசாரி மகன் நடேச ஆசாரி இருக்காரா?" என்று கேட்டார் சிதம்பரம்.
"அவரும் காலமாயி ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இது அவரோட மகன் சண்முகம் வரைஞ்சது. அவனும் அப்பா மாதிரியே பெரிய ஓவியக்காரன்" என்றான் மருது.
"பாத்தியா 'குலக்கல்வி கல்லாமல் பாகம் படும்' கிறது சரியாத்தான் இருக்குது. வீட்டுலே இருக்கானா அவன்?"
"அவன் இப்ப துபாயிலே இருக்கான். அப்பா காலமாறதுக்கு முந்தியே அங்க போய்ட்டான். சாவு சேதி கேட்டு வந்து காரியமெல்லாம் முடிஞ்சதும் திரும்பப் போய்ட்டான்"
சிதம்பரத்துக்கு அதே திண்ணையில் நடேச ஆசாரி அமர்ந்து சுவரில் சித்திரம் தீட்டியதும், தான் அருகிருந்து பார்த்ததும் கண் முன் விரிகிறது. திரும்பி வீட்டேதிரே பார்த்தார். அங்கே அப்பாவு ஆசாரி கோவிலுக்காகச் செதுக்கிக் கொண்டிருந்த
ரிஷப வாகனத்தை அருகே உட்கார்ந்து தான் பார்த்ததும், சற்றுத் தள்ளி அவர் மகன் நடேச ஆசாரி கடைசல் பட்டறையில் ஏதோ ஒரு சித்திரவேலைப்பாட்டை உளி கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்ததும், தன் வேலைக்கிடையே அப்பாவு ஆசாரி அதைப் பார்த்து 'உளிய அழுத்திப் பிடிக்காதே' என்று திருத்தியதும் காட்சி காட்சியாகக் மனத்திரையில் ஓடுகிறது.
நடேச ஆசாரி மரம் மற்றும் சுதை வேலைகளிலும் வல்லவர். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் திரௌபதை அம்மன் கோவிலில் பாரதம் பாடிவந்தார். நல்ல இசை ஞானமும் உண்டு. பாரதக் கதை பாடும்போது நடத்தப்படும் 'கீசக வதம்' நாடகத்தில்
திரௌபதையாக அவர் வேஷம் போடுவார். ஊரில் சிறுத்தொண்டர் அன்னப்படையல் நடக்கும் போது அவர் தான் சிறுத்தொண்டர் வேஷம் அணிந்து, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டுதலின்படி மாவில் செய்த சீராளன் பிரதிமையை மேளதாளத்துடன்
ஊர்வலமாக எடுத்துச் செல்வார். மாரியம்மன் கோவிலின் முன் நடக்கும் படையலில் பிள்ளைக் கறிக்காக சீராளனை அரியும் போது அவருக்குச் சாமி வந்துவிடும். ஆவேசமாய் உடலை முறுக்கி, பிடிக்கு அடங்காமல் உருண்டு புரண்டு மூர்ச்சையாகி விடுவார். அவருக்கு வரும் ஆவேசத்தைப் பார்க்கவே ஊரில் பலரும் அடுத்த வருஷத் துக்காகக் காத்திருந்ததுண்டு. அடுத்து நடைபெறும் சிறுத்தொண்டர் நாடகத்திலும் அவர்தான் சிறுத்தொண்டர். வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர் என்பதால் எல்லோருக் கும் ஒப்பனை போடுவதும் அவர்தான். விஜயதசமியில் பெருமாள் கோவில் அம்பு போடும் விழாவுக்குப் புராணகால வில் அம்பு தயாரித்துத் தருவதும் அவர்தான். சிவன் கோவிலில் முருகனுக்கு விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரங்களுக்கு குருக்களுக்குப் பெரிதும் உதவுவது அவர்தான். காமுட்டித் திருவிழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ரதி மன்மதன் படங்களை வரைந்து தருவது அவர்தான்.
அவரது வலது காதில் எப்போதும் கூராகச் சீவிய நீளப் பென்சில் இருக்கும். ஊர் முழுக்கக் காலியாய் இருக்கும் தெருப்பக்கச் சுவர்களிலும், சிலரது வீட்டுத் திண்ணைச் சுவர்களிலும் சுவாமி படங்களை - நடராஜா, லட்சுமி, சரஸ்வதி,
விநாயகர் - என்று வரைந்தபடியே தென்படுவார். ஆனால் எல்லா உருவங்களுக்கும் முகம் மட்டும் முழுமை அடைந்திருக்காது. கண்கள் மட்டும் திறக்கப்படாமல் வெறும் வெள்ளை விழிகளாய் இருக்கும். அதனால் சித்திரங்கள் அழகாக இருந்தாலும் வெள்ளை விழியால் குருடன் நம்மைப் பார்க்கிற மாதிரி, ஒரு மாதிரி இருக்கும்.
அடுத்த வீடான அருணாசலப் பண்டாரத்தின் வீடு இருந்த இடம் குட்டிச் சுவர்களுடன் காலியாகக் காட்சியளித்தது.
"பண்டாரம் வீடு என்னாச்சு மருது? அவரோட வாரிசு யாருமில்லியா?" என்று கேட்டார் சிதம்பரம்.
"பண்டாரத்தின் பெரியமகன் சிவலிங்கம்தான் இதுலே ரொம்ப நாள் குடி இருந்தாரு. அவரும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால காலமாயிட்டாரு. அடுத்தவன் சுப்பராயலு - நம்மளோட சின்ன வயசுலே படிச்சவன் சிவங்கோயிலு மெய்காவலா இருந்தான். அவனும் அண்ணனுக்கு முந்தியே போய்ட்டான். வீட்டப் பராமரிக்க ஆருமில்ல. இடிஞ்சு குட்டிச் சுவராக் கெடக்கு" என்றான் மருது.
அந்தச் சிவலிங்கம் அப்பாவிடம் மிகுந்த விசுவாசமும் மரியாதையும் மிக்கவன். எப்போதும் அப்பாவுடன் வயற்காட்டில், நெல் களத்தில் இருப்பான். அப்பாவைப் பற்றி யாரும் எதுவும் அவன் முன்னிலையில் சொல்லிவிட முடியாது.
சிதம்பரத்துக்குப் பத்து வயசு இருக்கும்போது ஒருதடவை அவனுடன் நெல் களத்தில் காவல் இருக்க நேர்ந்தது. அப்பாவின் சாதுவான குணத்தை ஏமாளி எனக் கருதிப் பலரும் அப்பாவை ஏமாற்றி வருவதாகச் சொன்ன சிதம்பரம், "இந்த அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை! எல்லாரியும் நல்லவங்கண்ணு நெனைக்கிறாங்க" என்று எல்லா விடலைப் பையன்களும் பேசுகிறமாதிரி சொல்லிவிட்டார். சிவலிங்கம், கண்களை உருட்டி ஆவேசமாக "என்னா சொன்னீங்க தம்பி? நம்ம அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாதா? அவங்களை விட உங்குளுக்கு அதிகம் தெரியுமோ? சின்ன வயசு, புரியாமப் பேசுறீங்க. அப்பாரைவிட இங்க அதிகம் தெரிஞ்சவங்க ஆரு?" என்று சண்டைக்கு வந்துவிட்டான். அவன் போன்ற விசுவாசிகளை இப்போது பார்க்க
முடிகிறதா என்று சிந்தனை ஓடியது.
கோவில் வாசலை நெருங்கியதும் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சிதம்பரம் உணர்ந்தார். முன்பு, வாயிலுக்கு முன்மண்டபம் கிடையாது. இப்போது பெருமாள் கோவிலில் இருப்பது போலவே - கற்றளியாக இல்லாமல் - செங்கல்லால் ஆன முன்மண்டபம் அமைக்கப் பட்டிருந்தது.
''இது எப்பப்பா கட்டுனது? அப்பா ரொம்ப நாளாக் கட்டணும்னு சொல்லிக்
கிட்டிருந்தாங்களே!"
"அது அப்பா காலமானதுக்கப்றம் வடக்குத் தெரு ராசமாணிக்கம் முயற்சி எடுத்துக் கட்டுனாரு. மேலே போட்டிருக்கிற நீளமான பலகைக் கல்லு முழுக்க நம்ம அம்மா உபயம் - அப்பா ஞாபமாக் குடுத்தாங்க. ஊர் ஊர் ஊராப்போயி நன்கொட வசூல் பண்ணிக் கும்பாபிஷேகமும் அவருதான் பண்ணுனாரு. அது நடந்து பத்து வருஷம் ஆச்சி" என்றான் மருது.
கோயில் விமானத்தை நிமிர்ந்து பார்த்தார். வண்ணம் மங்கிபோயிருந்தது. பிரகாரத்தைச் சுற்றிப் பார்க்க விழைந்தார். இந்தப் பிரகாரத்தைச் சின்ன வயதில் தினமும் அப்பாவுடன் சுற்றியதுண்டு. பள்ளியில் ஏதாவது தண்டனையிருந்து தப்பவோ, ஆசைப்பட்டது கிடைக்கவோ அவர் பிரகாரத்தைச் சுற்றுவதாக வேண்டிக் கொள்வார். பிரச்சினையின் கடுமைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும். 'அப்பனே! கைலாசநாதரே! இன்னிக்கு வாத்யார்க்கிட்ட அடிவாங்காம இருக்கணும்'பா. உன்ன பத்து சுத்து சுத்துறேன்' என்று வேண்டிக் கொள்வார். எப்போதுமே வேண்டுதல் பலிக்கும் என்பதில்லை. ஆனால் பலிக்காவிட்டாலும் தெய்வக் குத்தம் வந்துவிடும் என்று சொன்னபடி பிரகாரத்தைச் சுற்றிவிடுவார். ஒரு தடவை நல்ல மழையில்கூட சொன்ன சொல்லைக் காப்பாற்ற குடையைப் பிடித்தபடி சுற்றி வந்திருக்கிறார். இப்போது நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.
பிரகாரத்தைச் சுற்றி இருந்த நந்தவனத்தைக் காணோம். அதற்கும் கோவில் உபயோகத்துக்குமான கிணறு மூடப் பட்டிருந்தது.
"எங்கப்பா நந்தவனம்?" என்றார் சிதம்பரம்.
"சரியான பராமரிப்பு இல்லாம காஞ்சு போச்சுங்க. கெணறும் வத்திப் போச்சு.வேதவிநேசக் குருக்கள் றக்கோயிலுக்கு மாறிப் போனதுக்கப்றம் நெலயா இங்கியே தங்கிப் பூசை பண்ணுற குருக்கள் யாரும் அமையிலெ. ராஜேந்திரப்பட்ட ணம் கோயில் குருக்கள்தான் காலையிலும் அந்தியிலும் வந்து பூஜை பண்ணிட்டுப் போவாரு. உச்சிக் காலப் பூஜை நிண்ணுபோயி ரொம்ப வருஷம் ஆகுது. ராசமாணிக்கம் இருந்தவரிக்கும் கோயிலுக்கு வந்து குத்தம் கொறயக் கேப்பாரு. அவரும் போனதுக்கப்றம் இந்தக் கோயிலப்பத்தி யாருக்கு அக்கறை? கோயில் நிர்வாக அதிகாரியும் ராஜேந்திரப் பட்டணத்திலியே ஆபீஸை வச்சிக்கிட்டு இங்கே வர்ரதே இல்ல. எளவட்டத்துக் கெல்லாம் அரசியல்லதான் நாட்டம். அதுலே ஏதாவது சுருட்டிப் பொழைக்கலாம். இங்க என்னா கெடைக்கும்? கோயில் நெலத்தக் குத்தகைக்கு எடுத்தவன்லாம் சரியாக் குடுக்கறதில்லே. நித்ய பூஜைக்கே தள்ளாட்டம்" என்று பெருமூச்சு விட்டான் மருது.
பேசிக்கொண்டே சன்னதிக்கு எதிரே இருந்த கண்டாமணிக்கருகில் வந்து நின்றார்கள். அந்தக் கோவிலின் கண்டாமனி பெரியது. பெருமாள் கோவில் நகரா 'டப டப' என்று பேரிரைச்சலோடு முழங்குகிறமாதிரி இந்த மணி 'டாங் டாங்' என்று
ஊர் அதிர முழங்குவதும் சிதம்பரத்துக்குப் பிடிக்கும். இரண்டுமே ஊர் முழுதுமே கேட்கும். கண்டாமணியை மெய்காவல் இழுத்து அடிக்கையில் அதன் மேலுள்ள காவடி போன்ற அமைப்பு முன்னால் வளைந்து வளைந்து - குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறமாதிரி இருக்கும். அதைப் பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.
திரும்பி இடப்பக்கம் இருந்த குளத்தின் படித்துறையைப் பார்த்தார். அதுவும் உடைந்து சிதிலமாகி இருந்தது. குளமும் வற்றியும் தூர்ந்தும் பார்க்க வறட்சியாய்த் தெரிந்தது. படித்துறையின் இரண்டு புறமும் கரையில் சரக் கொன்றை மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாய்ப் பூத்துத் தொங்கும். காலைச் சூரியனின் கதிர்கள் அந்த மஞ்சள் பூக்களின் வழியே ஊடுருவி ஒருவிதப் பரவசத்தைக் கொடுக்கும். இப்போது மரத்தையே காணவில்லை. காட்டுக்கருவைதான் மண்டிக் கிடந்தது.
இந்தப் படியில் சிதம்பரம் பையனாக இருந்தபோது அப்பாவைப்போல் சிவலிங்கத்தை வைத்துப் பூஜை செய்தது நினைவுக்கு வருகிறது. அப்பா தருமை ஆதீனத்திடம் தீட்சை பெற்று பெரிய பூஜை செய்தவர்கள். தினமும் அதிகாலையில் எழுந்து வயற்காட்டுக்குப் போய் நிலங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவரக் காலை பத்து மணியாகும். பிறகு கிணற்றடியில் குளித்து அவர்களே ஆசாரமாய்க் கிணற்று நீரைச் சின்னக் குடத்தில் எடுத்து வந்து பூஜைக்கு அமர்வார்கள். இடுப்புத் துண்டுடன் நெற்றி, மார்பு, கை என்று பதினாறு பட்டைகளுமாய் விபூதி பூசி, கழுத்தில் தங்கக் கொப்பு வைத்த பெரிய ருத்திராட்ச மாலை அணிந்து பூஜைக்கென்று கட்டப்பட்டிருக்கும் சின்ன மேடையில் பூஜைக் கிண்ணங்க¨ளைப் பரப்பி, புற்று மண்ணால் தினமும் புதிதாக சிவலிங்கம் செய்து பூஜை செய்வார்கள். வெகு நேரம் தேவாரமும் திருவாசகமும் பாடி கண்மூடி பூஜிப்பார்கள். பூஜை முடிய ஒரு மணிக்கு மேலாகும். பனிரெண்டு மணிக்குதான் ஒரே வேளையாய் சாப்பாடு.
அப்பா பூஜை செய்யும் போது பலமுறை அருகிருந்து பார்த்துப் பார்த்து சிதம்பரத்துக்கும் அது போல் பூஜை செய்ய ஆவல் பிறந்தது. அப்பா பாடும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். அப்பாவின் சின்ன பழைய ருத்திராட்சமாலையை அணிந்து
கொண்டு, அப்பாவைப் போல¦வே விபூதிப் பட்டை போட்டுக் கொண்டு, ஒரு சின்ன மாவுக்கல் சிவலிங்கத்தையும் சின்ன குட்டி நந்தியையும் வைத்து இந்தப் படித்துறையில் அமர்ந்து அப்பா பாடும் பாடல்களைப் பாடி அவரும் பலதடவை பூஜை செய்திருக்கிறார். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் பூஜைக்கு வாரிசு என்றும் அப்பாவின் பூஜைப்பெட்டியை அவர்தான் வாங்கிக் கொள்ளப் போகிறார் என்றும் அருகிருந்து பார்த்த குருக்களும் மெய்காவலும் பேசிக் கொள்வார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தார். சின்னவயதின் மயக்கம் பின்னர் மேல் படிப்புக்குப் போனபோது மறைந்து போய், நாத்திகம் பேசுகிறவராய் அவர் ஆவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
"கோவிலுக்குத் தர்மாத்தாக்கள் இல்லியா? அவங்க தினமும் கோயிலுக்கு வரமாட்டாங்களா? இதயெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?" என்று கேட்டார் சிதம்பரம்.
'அதான் சொன்னனுங்களே. பெரிய கோயில்னா பரிவட்டம், முதல் மரியாத எல்லாம் கெடைக்கும். அதோட வருமானம் உள்ள கோயிலா இருந்தா அதிகாரிக்கு ஒத்துப்போனா நாய்க்குக் கறித்துண்டு வீசுறக் கணக்கா எதாவது பொறுகித் திங்க
லாம். இங்கதான் ஒடையவரே ஒருவேள நிவேத்தியத்துக்கு அல்லாடுறாரே! அதனாலே போட்டி இல்லே. ஆளும்கட்சிக்காரனுவ தான் மூணுபேரு பேருக்குத் தர்மகர்த்தான்னு இருக்கானுவ. அதிலே ஒருத்தன் சேரி ஆளு. யாரு தெரியுங்களா? உங்கப் பண்ணக் காரன் குண்டுமணி மவன் மூக்கறதான் ஒரு தர்மகர்த்தா. அப்பா ஒக்காந்த எடத்துல இவன்லாமா?" என்று அங்கலாய்த்தான் மருது.
"அப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுப்பா. அதுதான் ஜனநாயகம். எல்லாருக்கும் வாய்ப்புத் தரணுமில்லியா? அத்தோட அப்பாவோ மத்தப் பெரியவங்களோ என்னா சாசுவதம்? அவங்கதான் எத்தினி நாளைக்கு இருப்பாங்க? காலம் மாற மாற எண்ணங்களும் மாறித்தானே ஆகணும்?" என்று அவனை சமாதானப் படுத்தினார்.
"அப்படி இல்லீங்க. அந்தக் காலத்துலே தெரியாமியா ஊர்ப் பெரிய மனுஷாள மணியம், தர்மகர்த்தான்னு வச்சாஙக். பணத்தேவை இல்லாதவங்கண்ணா பொதுப் பணத்துக்கு ஆசப்பட மாட்டாங்க, இதுமாதிரி கோயில்ல பூஜைக்கு தள்ளாட்டம்னா
தெய்வத்துப் பயந்து கைப்பணத்தப் போட்டுக் கோயில்ல விளக்கு அணையாமப் பாத்துக்குவாங்க. இப்ப மாதிரி அண்ணாடங்காச்சிகளப் போட்டா அவனுக்கே திண்டாட்டங்கறச்சே ஆண்டவனுக்கு எப்புடிச் செலவழிப்பான்?" என்று மருது வாதம் செய்தான்.
"நமக்கு ஜனநாயகம் இன்னும் பிடிபடல்லே. எல்லாம் போகப்போகச் சரியாப் போகும். சரி போலாமா?" என்று நடந்தார்.
"எங்க தங்கப் போறீங்க?" என்று விசாரித்தான் மருது.
"அப்பு வீட்லதான் ரெண்டு நாளைக்கும். அவங்களுக்குக் கஷ்டம் வேணாம்னு கொஞ்சம் செலவுக்குப் பணம் கொடுத்திருக்கேன்."
"அது சவுரியப்படுங்களா? சொந்த வீட்டியும்தான் வித்துட்டீங்க. இப்ப விருந்தாளி மாதிரி சொந்த ஊர்லியே ஒருத்தர் வீட்டுலே தங்குறமாதிரி ஆயிப்போச்சு! சரி, போங்க. காலைலே நான் அங்க வந்து பாக்குறேன்" என்று விடை பெற்றுக் கொண்டான் மருது.
சிதம்பரம் அப்பு வீட்டை நோக்கி நடந்தார்.

Subscribe to:
Posts (Atom)